சென்னை: அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம் மற்றும் தீபா என அணிகள் பிரிந்து மல்லுக்கட்டு தொடங்கிய நிலையில் சின்னம்மாவின் கூவத்தூர் அன்புப் பிடியில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஓபிஎஸ் பக்கம் பதினோரு எம்.பி.க்களும் உள்ளனர், இந்நிலையில் விரல் விட்டு எண்ணக்கூடிய எம்.எல்.ஏக்களே ஓபிஎஸ் பக்கம் இருப்பதால் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டு சின்னம்மா சிறை செல்ல நேர்ந்தால்கூட, ஓபிஎஸ் பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் கை கோர்த்து, தனி அணி உருவாக்கி செயல்பட்டு வருகிறார். ஒரு வேளை சின்னம்மாவுக்கு சாதகமான தீர்ப்பு கூறப்பட்டால், தமிழக ஆட்சிப் பொறுப்பை சின்னம்மாவிடம் கொடுக்க மோடியின் பாஜக அரசுக்கு விருப்பமில்லை என்று தெரிகிறது. அந்த அவல நிலை தமிழகத்துக்கு ஏற்பட்டால், கலவரம், தற்கொலைகளை, பஸ், குடிசை எரிப்பு போன்றவற்றை தமிழகத்தில் ஏற்படுத்தி, ஆட்சியைக் கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்துவதே மோடியின் ஐடியா என பாஜக பட்சி ஒன்று கிசுகிசுக்கிறது. இதை தடுக்க சின்னம்மா தரப்பு 1000 குண்டர்களையும், 10,000க்கும் மேற்பட்ட போலீசாரையும் கூவத்தூரில் குவித்துள்ளனர். சின்னம்மா செய்ய வேண்டியதை செய்வோம் என்று சொன்னதுகூட குண்டர்கள் இருக்கும் தைரியத்தில் தான்.

இது குறித்து ஒரு பாஜக வட்டாரம் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக மட்டுமே உள்ள வித்யாசாகர் ராவ் முழு நேர கவர்னராக இல்லாததால், தமிழகத்துக்கு ஒரு கவர்னர் தேவை என்று தெரிகிறது.. சசிகலா தரப்பினர் எம்எல்ஏக்களை தற்காப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில் 11 எம்.பி.க்கள் ஓபிஎஸ் பக்கம் சென்றிருப்பது சின்னம்மா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப் பதில் ஆளுநர் காலதாமதம் செய்வது, எம்.பி.க்கள் ஓபிஎஸ் பக்கம் செல்வது ஆகியவற்றின் பின்னணியில் பாஜக மோடியின் மோடி மஸ்தான் வேலை ஆரம்பமாகியுள்ளது. எனவே பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறி பன்னீர்செல்வம் தோல்வியைத் தழுவினால், வேலை இன்றி ஓபிஎஸ் மீண்டும் டீக்கடை வைக்கச் சென்று விடக்கூடாது என்றெண்ணிய மோடி ‘ஒரு டீக்கடைக்காரன் மனது இன்னொரு டீக்கடைகாரனுக்கு தான் தெரியும்’ என்கிற சொல்லுக்கு ஏற்ப குறிப்பறிந்து தமிழகத்தில் காலியாக உள்ள கவர்னர் பதவியை ஓபிஎஸ்க்கு வழங்கி, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தி காவி அரசியலையும், பணமதிப்பிழப்பு போன்ற பல மக்கள் விரோத திட்டங்களையும், நடைமுறைப்படுத்தி தமிழகத்தை சுடுகாடாக்கும் திட்டம் வைத்துள்ளோம். இனிமே எங்களுக்கு எங்களது கட்டளைகளை நிறைவேற்ற தமிழ்நாட்டில் ஒரு அடிமை கிடைத்துள்ளது, அதை வைத்து பல காரியங்களை செய்வோம் என்று கூறினார்.

பகிர்

There are no comments yet