சென்னை: கருணநிதியின் மனைவியர்களுள் ஒருவரான ரஜாத்தி அம்மாள் வீடு சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கே லட்டா, திண்டுக்கல்லுக்கே பூட்டா, கும்பகோணத்துக்கே வெற்றிலையா, என்று கலைஞர் பாணியில் அடுக்கு மொழியில் கூறி ‘தமிழ்நாட்டை திருடி பங்கு போட்ட எங்களிடமே திருட்டா?’ என அங்கிருந்த திமுக தொண்டர்கள் அந்த நபரை அடித்து துவைத்து காவல் துறையிடம் ஒப்படைத்ததாக கப்ஸா நிருபர் தெரிவித்தார். ராஜாத்தி அம்மாள் குரல் கொடுத்து கத்தியதைத் தொடர்ந்து ‘ஏவலுக்கு’ இருந்த போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விட்டனர். விசாரணையில் அவரது பெயர் ராஜேந்திர பிரசாத் என்றும் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. அவர் வைத்திருந்த பொம்மைத் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது திருடர்கள் குல திலகமான கருணாநிதியின் வீட்டிலேயே கன்னக்கோல் வைத்த ஜகஜ்ஜல கில்லாடியை மயிலாப்பூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கருணாநிதி கழுத்தில் சொருகப்பட்ட ட்ராகியஸ்டமி குழாய்களை அகற்ற டாக்டர்களுக்கு தினசரி பேட்டா தரப்படாததால் அவரால் கூக்குரலிட முடியாத நிலை உள்ளது. அரசியல் ஒரு துரும்பு அசைந்தால் கூட தனது கரகரத்த குரலில் நைய்யாண்டி செய்யத் தவறாத கருணாநிதி இன்று பேசா மடந்தையாக பெட் ரெஸ்டில் இருக்கிறார். சின்னம்மா வேறு ‘சிங்கம்’ கதை சொல்லி கூவத்தூரில் அடைபட்டிருக்கும் எம்.எல்.ஏக்களை குட்டி சிங்கங்கள் என்று நைச்சியமாகப் பேசி கட்டுக்குள் வைக்க முயற்சி செய்கிறார்.

இது குறித்து திருவல்லிக்கேணி தொகுதி எம்ஏல்ஏ அன்பழகன் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “வயதானாலும் சிங்கம் சிங்கம் தான், காட்டில் பல சிங்கங்கள் இருந்தாலும் ஒரு சிங்கம் தான் அரசனாக இருக்க முடியும். அது கருணாநிதி தான். தற்போது அவர் நினைவு பிறழ்ந்து பேச முடியாத நிலையில் இருப்பதால், நினைவை திரும்பக் கொண்டு வரும் நிலையில் பழைய ஊழல்களை பற்றி இரண்டு பேரை வேலைக்கு வைத்து தினசரி மந்திர உச்சாடனம் போல் சொல்லச் சொல்லி வருகிறோம். மேலும் சமீபத்தில் வெளியான சூர்யா நடித்த சிங்கம் மூன்றாம் பாகம் படம் படுவேகமாக செல்வதாக சொல்கிறார்கள், அதன் உரிமையையும் மிரட்டி வாங்கி கலைஞருக்கு போட்டுக் காட்டி சுருங்கிப் போன கருணாநிதியின் நரம்புகளை சுண்டிவிட முயற்சித்து வருகிறோம். பன்றிகள் தான் கூட்டமாக வரும், சீக்கு பிடித்த கருணாநிதி சிங்கம் சிங்கிளாக மார்ச் மாதம் மக்களிடையே வரும்..” என்றார்.

பகிர்

There are no comments yet