சென்னை: கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள கோல்டன் பே ரிசார்ட்டின் லெட்டர் பேட் அல்லது துண்டுச் சீட்டில் “எங்களை ரவுடிகள் அடித்துத் துன்புறுத்துகிறார்கள். காப்பாற்றுங்கள்” என்று கூறி வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை எழுதியது யார் என்பது தெரியவில்லை. எம்.எல்.ஏக்கள்தான் தற்போது அங்கு வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது உண்மையா என்றும் தெரியவில்லை. அதேசமயம், கோல்டன் பே ரிசார்ட் பேப்பரில் எழுதி வந்துள்ளதால் இதைப் புறக்கணிக்கவும் முடியவில்லை. மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஐயா அவர்களே, நாங்கள் எம்.எல்.ஏக்கள் அனைவரும் இங்கு கூவத்தூரில் ரவுடிகளால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுகிறோம். டிவி செல், பேப்பர் என எதுவுமே கிடையாது. ரவுடிகள் அடிக்கடி அடித்துத் துன்புறுத்துகின்றனர். நேற்று ஒரு எம்.எல்.ஏ. நண்பரை அடித்ததில் வயிற்று வலி, நெஞ்சு வலி ஏற்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். எனவே ரவுடிகளிடமிருந்து எங்களை ஆளுநர் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழக ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக சின்னம்மா பல்வேறு தாதா செயல்களில் ஈடுபட்டது தமிழகத்துக்கு வெட்டவெளிச்சம். இந்நிலையில் சின்னம்மா தரப்புக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்து தீர்ப்பளிக்கப்பட்டதால், தங்களை கூவத்தூர் ரிசார்ட்டிலேய சமாதி கட்டி விடுவார்களோ என்று எம்.எல்.ஏ க்கள் கலங்கிப் போயுள்ளார்கள். பன்னீர்செல்வம் பக்கமும் போக முடியாமல் ரிசார்ட்டிலும் சோறு தண்ணீர் கரண்ட் இன்றி தங்க முடியாமல் இரு தலைக் கொள்ளி எறும்பாக துடித்துக் கொண்டிருக்கின்றனர்கள். ஒருசிலர் பன்னீரின் பக்கம் செல்லும் ரகசியத் திட்டத்துடன் ரிசார்டிலேயே பொழுதைக் கழிக்கின்றனர். நமது கப்ஸா நிருபர் கூவத்தூர் சென்ற போது, “சின்னம்மாவிற்கு சிறைத்தண்டனை கிடைத்ததற்கும், அவப்பெயர் ஏற்பட்டதற்கும் முழுக் காரணம் ஜெயலலிதாதான் அம்மா ஒழிக, சின்னம்மா வாழ்க” என்று சிலர் கடுமையாக கோஷமிட்டனர். எஞ்சியுள்ள சின்னம்மாவின் ஆதரவு விசுவாச எம்.எல்.ஏக்கள் சின்னம்மாவின் மீது ஏற்பட்ட களங்கத்தை துடைக்க, தங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு சின்னம்மா ‘முறைவாசல்’ செய்ய உள்ள பெங்களுரு பார்ப்பன அக்ரஹார சிறை வரை அலகு குத்தி பால்குடம் எடுத்து பாதயாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.

பகிர்

There are no comments yet