சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை இரவு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அங்கு அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வந்தனர். தீபாவுக்கு காத்திருந்த ஓ.பி.எஸ்.: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரவு 9.15 மணியளவில் எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்கு வந்தார். அப்போது, அவர் ஜெயலலிதாவின் சமாதிக்குள் வராமல் காத்திருந்தார். அவர் யாருக்காக காத்திருக்கிறார் என்று அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்தது.

அப்போது, திடீரென ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., நினைவிடத்துக்குள் நுழைந்தார். இது அங்கு கூடியிருந்தவர்களிடம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தீபா முன்னே செல்ல முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரைப் பின்தொடர்ந்தனர். பின்னர், ஜெயலலிதாவின் சமாதியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விழுந்து வணங்கினார். அவரைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து, தீபாவும் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் வணங்கினார். தீபாவுடன், முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சமாதியைச் சுற்றி வந்து வணங்கினார். இதன் பின், செய்தியாளர்களுக்கு தீபா அளித்த பேட்டி: இரு கரங்களாகச் செயல்படுவோம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், நானும் (தீபா) இருகரங்களாகச் செயல்படுவோம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் இணைந்து மேற்கொள்வோம் என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். நீங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம், எனக்கு ஆட்சி செய்ய அதிகாரம் கொடுத்தால் அரசியலுக்குள் நுழைவேன் என்றார். இதன் பின் சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை வழங்கியள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா, என் அத்தை ஜெயலலிதாவும் தான் சிறைக்கு சென்றார், சிறைச்சாலை எங்களுக்கு மலர்ச்சோலை  இப்போதெல்லாம் ஜெயிலுக்கு போனால் தான் மதிப்பு. இந்தக் கருத்தை தீர்ப்பு வெளிவந்த இன்று காலையில் இருந்தே கூறி வருகிறேன் என்றார் தீபா.

இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு தீபா சென்றார். அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலில் விழுந்து வரவேற்று அழைத்துச் சென்றார். தீபாவுடன் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். பின்னர் நமது கப்ஸா நிருபரிடம் பேசிய முதல்வர் கூறியதாவது: குட்டி அம்மா தீபா, நமது அம்மா ஜெயலலிதா போலவே இருந்ததால் காலில் விழுந்து வணங்கினேன். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா இறந்த பிறகு சின்னம்மா சசிகலா காலில் விழுந்தேன். அதற்குப் பிறகு டெல்லி சென்று பிரதமர் மோடி காலில் விழுந்தேன். மோடி டெல்லியில் இருப்பதால் அடிக்கடி விமான பயணம் செய்து டெல்லி சென்று அவர் காலில் விழ வேண்டியுள்ளது. அதனால் தான் லோக்கலாக இருக்கட்டுமே என்று தீபாவுடன் கூட்டணி வைக்க சொன்னார் மோடி. இப்போது தீபா காலில் விழுந்து பழைய விசுவாசி ஓபிஎஸ்சாக மாறியிருக்கிறேன். சசிகலா ஜெயிலுக்கு போய் விட்டாரே என்று என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், அவர் போனால் போகட்டும், நான் குட்டி அம்மா தீபாவை காட்டியே தொண்டர்களை கைக்குள் கொண்டு வந்து விடுவேன்., பிறகென்ன மோடி ராஜ்ஜியம் தான். நேரமாச்சு கூவத்தூர்ல இருந்து எத்தனை எம்.எல் ஏ வை கொண்டு வந்தாய் என்று மோடியும், கவர்னரின் இன்று கணக்கு கேட்பார்கள் வருகிறேன் என்று கூறி பேட்டியை முடித்துக்கொண்டார்.

There are no comments yet