சென்னை: தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆட்சியமைக்க உரிமை கோரினர். அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் எம்.பி., மதுசூதனன், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், செம்மலை உள்ளிட்டோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் சென்றனர். தமிழக சூழல் குறித்தும் தம் தரப்பு ஆதரவு குறித்து விளக்கிப் பேசியதாக தெரிகிறது. முன்னதாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் 10 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்களை ஆதரவு உள்ளதால் திமுக, காங்கிரஸ் துணையுடன் தன்னால் நிலையான ஆட்சியை தர முடியும் என்று ஓபிஎஸ் ஆளுநரை வலியுறுத்தியதாகவும், அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து பழைய அமைச்சரவையை கலைத்து விட்டு தனக்கு ஆதரவானவர்களை அமைச்சர்களாக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாகவும், புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநருக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளதாகவும் ஓபிஎஸ் நமது கப்ஸா நிருபரிடம் தெரிவித்தார். அனால் இன்னும் கொஞ்சம் பேரை எதிர்பார்த்து உள்ளதாகவும் அவர்கள் வந்தால் அவர்களுக்கும் மந்திரி பதவி உறுதி என்று கூறி பெயர்களை தெரிவிக்க மறுத்து விட்டார்.

இதையடுத்து ஓபிஎஸ்சின் உதவியாளருக்கு சம்திங் கொடுத்து பேக்ஸ் மெஷினில் கிடந்த அமைச்சரவை பட்டியலை உருவிக்கொண்டு வந்தார் நமது கப்ஸா நிருபர். டாப் சீக்ரெட்டான அமைச்சரவை பட்டியல் உங்கள் நியூஸ் வாசகர்களுக்காக பிரதேயமாக இதோ:

ஓ.பி.எஸ் தலைமையில் புதிய அமைச்சரவை…

முதல்வர் ஓ பி எஸ்

உள்துறை – தீபா ஜெயக்குமார்

காவல் துறை – நடராஜ் IPS

நிதி அமைச்சர் கரூர் அன்பு நாதன்

கனிமத்துறை சேகர் ரெட்டி

மின்துறை நத்தம் விஷ்வநாதன்

விவசாயம் அக்ரி கிருஷ்ண மூர்த்தி

நெடுஞ்சாலைத்துறை – ஓ பி எஸ் மூத்த மகன் ரவிந்திரநாத்

பொதுப்பணித்துறை – ஓ பி எஸ் தம்பி ராஜா

கலால் துறை – நத்தம் விஷ்வநாதன் மகன் அமர்நாத்

பாராளுமன்ற தலைவர் – சசிகலா புஷ்பா எம் பி

முதல்வரின் ஆலோசகர் – ஞானதேசிகன் IAS

தலைமை செயலாளர் – ராம் மோகன் ராவ்

இந்நிலையில் பி.ஹெச். பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், தற்போதைய கல்வி அமைச்சர் பாண்டிய ராஜன், மற்றும் 7-எம்எல்ஏக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாகவும். அவர்களது திறமைக்கு ஏற்ற இலாகா என்னவென்று அவர்களிடம் கருத்து கேட்டு பின்னர் பிரதமர் மோடி பரிந்துரைக்கு அனுப்பப்பட உள்ளதாக ஓபிஎஸ் வட்டாரங்களும், ராஜ்பவன் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.

கவர்னரின் இந்த முடிவால் எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி அதிர்ச்சியில் இருப்பதாக கூவத்தூரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet