சென்னை: சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவிற்கு தண்டனை கிடைக்கப்பெற்ற நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி நீதிமன்றத்தில் சரணடைய இரண்டு வார காலம் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது., நீதிமன்ற உத்தரவின்படி பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய, சசிகலா இன்று காலை புறப்பட்டார். முன்னதாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு புறப்படுமுன், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று அங்கு அவரது சமாதியில் சசிகலா அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய சசிகலா, மலர்தூவிய பின், ஏதோ முணுமுணுத்து, மூன்று முறை ஜெயலலிதாவின் சமாதியில் ஓங்கி அறைந்து ஏதோ சபதம் செய்ததை தொலைக்காட்சி நேரலைக் காட்சிகள் காண்பித்தன.

மிகுந்த உணர்ச்சி வயப்பட்ட நிலையில் காணப்பட்டார் சசிகலா. அப்போது அங்கு மிகச்சிறிய அளவில் கூடியிருந்த அஇஅதிமுக தொண்டர்கள் கூட்டத்தினர் சசிகலாவை ஆதரித்து முழக்கமிட்டனர். பின்னர் அங்கிருந்து ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லம் சென்ற வி.கே. சசிகலா, எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார். பின்னர் சிறைச்சாலைக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக ஜெயா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அன்றே பிணமாகத்தான் கொண்டுவரப்பட்டார் என்ற வதந்தி கிளப்பப்பட்டது. வேறு சிலர், சசிகலாவுக்கும் ஜெயாவுக்கும் வாக்குவாதம் முற்றி, சசி ஜெயாவை அடித்து கீழே தள்ளி மயக்கமடைந்ததால் அப்பல்லோ கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சசிகலா முணுமுணுத்தது என்ன என்பதை அறிய தொண்டர்களும் ஜெயா சம்மதியில் கூடியிருந்த மக்களும் ஆவலுடன் இருந்த நிலையில், நமது கப்ஸா நிருபர் செய்த புலனாய்வில் உண்மை வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதில் சுவாதி கொலைவழக்கில் சந்தேகிக்கப்பட்டு போலீசாரால் சிறையில் ‘தற்’கொலை செய்யப்பட்ட ராம்குமார் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்த விதத்தை நடித்துக் காட்டியது போல், சசிகலா ஜெயாவை அடித்து கீழே தள்ளியது எப்படி என்பதை அங்கு மாறுவேடத்தில் இருந்த காவல் துறையினருக்கு நடித்துக் காட்டியதாக கப்ஸா நிருபர் கண்டுபிடித்துள்ளார்.

சற்றும் குறையாத கோபாவேசத்துடன் சசிகலா கப்சா நிருபருக்கு அளித்த பேட்டி: “கவர்னர் வித்யாசாகர் ராவ் எனது முதல்வர் பதவி ஏற்பைத் தள்ளிப்போட்டது அதிமுகவை பிளக்க செய்த சதி. அக்கா இருந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. நாட்டாமை தீர்ப்பை மாத்து என்று மோடியிடம் கூறி வழக்கின் போக்கை மாற்றியிருப்பார். அவர் அநியாயமாக இறந்து போய், இப்போது அவருக்கும் சேர்த்து நான் அனுபவிக்கிறேன். பிளான் எல்லாம் பக்காவா போறதை பார்த்தால்அக்காவின் கதையை முடிச்சது பாஜகதானோன்னு ஒரு டவுட்டு வருது. ஜெயா செய்த தவறால் நான் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியதாகி விட்டது, இருந்தாலும் கவலை இல்லை எனது 33 வருட “முறைவாசல்” அனுபவத்தை வைத்து, ஜெயிலை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து கோலம் போட்டு, நன்னடத்தையைக் காட்டி ஆறே வாரங்களில் சிறையில் இருந்து வெளியே வந்து தமிழகத்தில் ஆட்சி அமைப்பேன்.” என்று சூளுரைத்தார்..

பகிர்

There are no comments yet