சென்னை: அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என இரு தரப்பாக அதிமுக பிளவு கண்டுள்ளது. இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வந்துள்ளதால், சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். முதல்வராகவும் ஆகி விட்டார். எனினும், தனது அறப்போர் தொடரும் என பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், மனமுடைந்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் திடீரென தீக்குளித்தார். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவரை, பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். பின்னர் கப்ஸா நிருபரிடம் பேசுகையில்: என்னை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே சின்னம்மா தூக்கி எறிந்து விட்டார். இதனால் மனமுடைந்த நானே முதலில் தீக்குளிக்கலாம் என்று நினைத்தேன். கூட இருந்த ஆதரவு எம்மெல்ஏக்கள் என்னைக் குளிக்க வேண்டாம் என்று கூறிவிட்டதால், செண்ட் மட்டும் அடித்துக் கொள்கிறேன். வழக்கம் போல் அமைதியாக இருக்கிறேன். காவிரிப் பிரச்சினயின் போது நாம் தமிழர் கட்சியின் இளம் தொண்டன் விக்னேஷ் தீக்குளித்து சிகிச்சைப் பலனின்றி இறந்தான். அப்போது சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் “மற்றவர்கள் அவனை ஏன் தடுக்கவில்லை, கூட்டத்தில் சென்று கொண்டிடுந்தவனுக்கு பெட்ரோல் கேன் தீப்பெட்டி சப்ளை செய்தது யார்?” என அவன் மரணம் பற்றி கேள்வி எழுப்பினார்கள். சீமான் அவன் மிகவும் உணர்ச்சி வயப்பட்டு அப்படி செய்துவிட்டான் என்று சமாளித்தார். எனக்கு திடீரென விக்னேஷ் நினைவுக்கு வந்ததான். அதனால் விக்னேஷைக் கொளுத்தியதை போல் மூசாவை தீ வைத்துக் கொள்ள சொன்னோம் என்றார்.

நாம் தமிழர் சீமான் ஒரு பரபரப்பிற்காக ஒரு இந்துவை கொளுத்தினார், நான் திமுகவுடன் கை கோர்த்து இஸ்லாமிய நண்பர்களின் அனுதாபத்தை சம்பாதிக்க மூசாவை கொளுத்த சொன்னேன்.” என்றார். மேலும் திருஷ்டி பட்ட எனது பொற்கால ஆட்சியில், சில உயிர்களையாவது காவு வாங்கி நரபலி திட்டதை நிறைவற்றுவேன் என்று சூளுரைத்தார். இது குறித்து செட்டப் செய்ய, பட்டன் கத்தி, பாளை நறுக்கும் அரிவாள், சுருள் கத்தி போன்றவையுடன் தேவையான அளவு பெட்ரோலையும் வாங்கி ஸ்டாக் வைத்துள்ளேன் என்றார்.

பகிர்

There are no comments yet