சென்னை: மக்கள் விரும்பாத ஆட்சி தூக்கி எறியப்படும். மக்கள் விரோத ஆட்சியை விலக்கும்வரை ஓயமாட்டோம், உறங்கமாட்டோம் என்று ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் சபதம் ஏற்றுள்ளார். புதிய முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு வந்து மரியாதை செலுத்தினார். அதற்குப் பிறகு ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுடன் மெரினா வந்து ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: ”2011-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினரை ஜெயலலிதா கட்சியிலிருந்து விலக்கினார். பிறகு உதவிக்காக சசிகலாவை மட்டும் சேர்த்துக்கொண்டார். ஆனால், யாரை ஜெயலலிதா ஒதுக்கிவைத்தாரோ அவர்களே இன்று ஆட்சியை முடிவு செய்யும் அளவுக்கு துர்பாக்கியம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. சசிகலா குடும்ப ஆட்சிதான் பதவியேற்றுள்ளது. இது ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை. ஜெயலலிதாவின் புனித ஆட்சியை அமைப்போம். மக்கள் விரோத ஆட்சியை விலக்கும்வரை ஓயமாட்டோம், உறங்கமாட்டோம்.

எம்.எல்.ஏக்கள் மனசாட்சிப்படி நியாயமான முறையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் எண்ணங்களை வெளிப்படுத்தும் விதமால வாக்காளர் பேரணி, ஊர்வலம் நடத்தப்படும். ஏழரை கோடி மக்களும் எங்களைத்தான் ஆதரிக்கிறார்கள். மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. மக்கள் விரும்பாத ஆட்சி தூக்கி எறியப்படும். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதே தலையாயக் கடமை என்று மக்கள் சபதம் ஏற்றுள்ளார்கள்” என்றார்.

பின்னர் கப்ஸா நிருபரிடம் மனம்விட்டு பேசிய ஓபிஎஸ் கூறியதாவது: இப்போது உள்ளதும் போச்சுடா என்று இருக்கிறேன். பேசாமல் இருந்திருந்தால், இப்பொது சின்னம்மா சிறையில் இருப்பதனால் எனக்குதான் முதல்வர் பதவி கிடைத்திருக்கும். அம்மாவின் ஆன்மாவையும், மோடியையும் நம்பி மோசம் போய்விட்டேன். எப்படியும் மோடி துணையுடன் இந்த எடுபிடி பழனிச்சாமி அரசை முடக்கி மீண்டும் முதல்வர் ஆவேன் என்று சின்னம்மா மாதிரி இல்லாமல் தன தலையில் மூன்று தடவை அடித்து சபதம் செய்தார்.

There are no comments yet