சென்னை: ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்துள்ளதால் மீண்டும் தாய்க்கட்சியான திமுகவுக்கு செல்ல நடிகர் ராதாரவி முடிவு செய்துள்ளார். திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த நடிகர் ராதாரவி பின்னர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து எம்.எல்.ஏவும் ஆனார். ஆனால் தற்போதுள்ள அதிமுகவின் ‘அசாதாரண’ சூழ்நிலை காரணமாக மீண்டும் அவர் திமுகவுக்கு செல்லவுள்ளார். சமீபத்தில் நடந்த வாகை சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட ராதாரவி இதை தெரிவித்ததோடு விரைவில் திமுக தலைவர் மற்றும் செயல் தலைவரை சந்தித்து திமுகவில் இணையவுள்ளாராம். இதை நேற்று நடந்த ஒரு படவிழாவிலும் அவர் உறுதி செய்துள்ளார். வாகை சந்திரசேகரின் மகள் திருமணத்தின் போது ராதாரவி ஒரு பிட்டை போட்டு வைத்தார். “இங்கு வந்துள்ள அனைவரும் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கூறினர். அதற்கான நேரம் வந்துவிட்டது. ஸ்டாலினுக்கு அதற்கான தகுதியும் உள்ளது.பலர் என்னை எப்போது இங்கு வருவீர்கள் என்று கேட்கின்றனர். நேரம் வரும்போது நானும் இங்கு வந்துவிடுவேன்” என்பது தான் அது.

மீண்டும் திமுகவில் இணைவது குறித்து ராதாரவி கப்ஸா நிருபரிடம் அளித்த பேட்டி:”அதிமுகவின் அழிவு காலம் ஆரம்பமாகி விட்டது. திமுக ஆட்சி அமையவுள்ளது. அதற்குத்தான் ஒவ்வொரு கல்யாண விழாவாக போய் ஸ்டாலின் ‘புரளி’ பேசி வருகிறார். தாய்க்கிழவியான சின்னம்மா பார்ப்பன அக்ரஹாரா சிறைக்கு முறைவாசல் செய்து மெழுகுவர்த்தி தயாரிக்கப் போய்விட்டதால் எனது தாய்க்கழகமான தமிழீனத் தலைவர் கருணாநிதியின் திமுகவில் மீண்டும் என்னை இணைத்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வராத என் அப்பாவின் குரலை கட்டாயமாக வரவழைத்து பேசி நடித்து எனது தொண்டை தலைவர் கலைஞர் போல ‘ட்ராக்கியாஸ்டமி’ செய்யும் நிலைக்கு போய்விட்டது. இனிமேல் பக்கம் பக்கமாக வசனம் பேசி எல்லாம் நடிக்க முடியாது, சில நாட்களில் ஊமை ஆனாலும் ஆச்சரியமில்லை. ஓடியாடி இளம் வயது ஹீரோயின்களை பாலியல் துன்புறுத்தல் போன்ற காட்சியிலும் நடிக்க முடியாது, மூட்டு வலி வந்துவைட்டது, ரத்தக் (கண்ணீர்) கொதிப்பால் மூச்சிரைப்பும் உள்ளது. கடைசி காலத்தில் கஞ்சி குடிக்க கழகத்திற்கே திரும்பி விட்டேன், கூட்டிக் கழிச்சி பாருங்க திமுகவின் ஊழல் கணக்கு சரியா வரும்” என்று தனது பிரபலமான வசனத்தைக் கூறியபடி கப்ஸா நிருபரை தனது வில்லத்தன முறைப்பால் ‘தெறி’க்கவிட்டார்.

பகிர்

There are no comments yet