சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் பெற்றுள்ள வெற்றி செல்லுமா செல்லாதா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூடிய சட்டசபை கூட்டத்தில் கடும் ரகளை மற்றும் அமளிக்குப் பிறகு வாக்கெடுப்பி நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இதன்பின்னர் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:

இன்று சபை கூடியதும் உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிக்க விருப்பமோ தங்கள் மனசாட்சிப்படி அவர்களுக்கு வாக்களிக்கலாம் என்று கேட்டுக் கொண்டோம். அத்துடன் இதனை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டோம். ஆனால் எவ்வளவோ எடுத்து சொல்லியும் சபாநாயகர் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவில்லை.

எனக்கு ஆதரவாக ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் தனது சட்டையை கூட கிழித்து சட்டமன்றத்தில் அங்கும் இங்கும் ஓடினார். அப்படியும் சபாநாயர்கர் அவரை கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்கள் அடைந்துள்ள இந்த வெற்றி செல்லுமா செல்லாதா என்பதை மக்கள் தீர்மானிப்பர்கள் இந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதிக்குச் சென்று மக்களை சந்திக்க முடியாத நிலை வரும். ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு குடும்பத்தின் ஆட்சி தற்போது வெற்றி பெற்றுள்ளது. அநீதிக்கு எதிரான இந்த தர்மயுத்தம் இன்னும் சிறிது காலம் தொடரும்.

அம்மாவின் ஆவி வந்திருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. எப்படியாவது அம்மா எங்களை ஸ்டாலினுடன் கோர்த்து விட்டு இந்த ஆட்சியை கலைத்திருப்பார். இப்போது ஏமாற்றத்தில் உள்ளேன். பெங்களூர் சென்று சின்னம்மாவை சந்தித்து மன்னிப்பு கேட்பேன் என்று அழுகையுடன் கூறினார்.

There are no comments yet