சென்னை: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அவை சரியாக 1 மணிக்கு மீண்டும் கூடியது. அவை கூடியபோது பேசிய சபாநாயகர் வி.பி.தனபால், “எனக்கு நேர்ந்த கொடுமையை எங்குபோய் சொல்வது. சட்டப்பேரவை விதிகளுக்கு உட்பட்டுத்தானே நான் அவையை நடத்த முடியும்” என்றார்.

அவையில் மீண்டும் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையின் பல்வேறு விதிகளை சுட்டிக்காட்டி ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்றார். முன்னதாக, திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். திமுக எம்.எல்.ஏ பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார். சபாநாயகரின் இருக்கை, மேஜை, மைக் உள்ளிட்ட பொருட்கள் உடைத்தெறியப்பட்டன. இன்றைய அலுவல் நிரல் அடங்கிய காகிதங்களை கிழித்தெறிந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், அவையை 1 மணிவரை ஒத்திவைத்துவிட்டு வெளியேறினார் சபாநாயகர். அவரை அவை பாதுகாவலர்கள் பத்திரமாக அறைக்கு அழைத்துச் சென்றனர். சபாநாயகர் வெளியேறிய பின்னரும் அவையில் திமுகவினர் தொடர்ந்து முழக்கமிட்டனர். திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினார்.

நமது கப்ஸா நிருபரிடம் பேசிய சபாநாயகர் வி.பி.தனபால் திமுக ‘செயல்’ தலைவர் ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக ஓடி ஆட்ரா ராமா , ஓட்ரா ராமா என்பது போல் ஓடிக்கொண்டிருந்தார். அவரை காவலர்களை விட்டு நாலு சாத்து சாத்தி கட்டுக்குள் கொண்டு வந்தோம்.. கீழ்பாக்கம் செல்லவேண்டியவர்கள், சட்டசபைக்கு வந்து என் உயிரை எடுக்கின்றனர் என்று எரிச்சலோடு சொன்னார்.

There are no comments yet