சென்னை: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். மேலும் மன்னர்குடி குடும்பம் ஆட்சியை கைப்பற்றிவிட்டது எனவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட அமளியினால் 2 முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வது முறையாக 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்குவதற்குள் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அதன்படி வெள்ளைச் சீருடை அணிந்த காவல் படையினரால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் குண்டுக்கட்டாக வெளியற்றப்பட்டனர். இதில் ஸ்டாலின் சட்டை கிழிந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டு, கிழிந்த சட்டையுடன் ஸ்டாலின் ஆவேசமாக பேசுவது போன்ற படங்கள் இணையத்தில் வெளினாகின. சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடுபிடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் ‘எடுபிடி’ வெற்றி பெற்றார் என்று சபாநாயகர் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை எனக் கூறி எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். சென்னை தி.நகர் இல்லத்தில் பால்கனியில் நின்றபடியே கப்சா நிருபரிடம் தீபா பேசும்போது, ‘மெரினாவுக்கு – பிரச்சினையோடு வாங்க தீர்வோடு போங்க’ என்ற தற்கால கூற்றுக்கு ஏற்ப மன்னார்குடி தரப்பு மெரினா வந்தால் வெற்றி கிடைக்கிறது, நான், ஓ.பி.எஸ், ஸ்டாலின் சென்றால் சுண்டல் கூட கிடைக்க மாட்டேங்கிறது. ஸ்டாலினோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் சும்மானாச்சுக்கும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது, அப்பல்லோவில் அத்தை தங்கி இருந்தபோது சின்னம்மா திட்டமிட்டு ஜனநாயக படுகொலை செய்தது போன்றதொரு ஜனநாயகப் படுகொலை. அரசை எதிர்த்து மக்கள் பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்றி வீட்டது வருத்தமளிக்கிறது நாயை ஏவினால் அது தன் வாலை ஏவுமாம், அதுபோல் அத்தைக்கு ஒரு பினாமி சின்னம்மா இப்போது சிறையில் இருக்கும் சின்னம்மாவுக்கு ஒரு எடுபிடி, பழனிசாமி.” என்று கண்ணீர் வடித்தார்.

பகிர்

There are no comments yet