சென்னை: முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அ.தி.மு.க பொதுசெயலாளர் ஆனார். அவர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதும் பிரச்சினை உருவானது. சசிகலாவுக்காக முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ. பன்னீர் செல்வம் 2 நாட்கள் கழித்து திடீர் என்று ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து தனது மவுனத்தை கலைத்தார்.

சசிகலாவுக்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு தான் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அ.தி.மு.கவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகள் உருவானது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடம் ஜெயில் தண்டணை விதிக்கப்பட்டதால் சிறை சென்றார். அவர் ஜெயிலுக்கு புறப்படும் முன் கூவத்தூர் எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார். நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை காப்பாற்றுங்கள், எந்த சூழ்நிலையிலும் கட்சி பிளவுக்கு காரணமானவர்களை மன்னிக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறினார்.

னக்கு எதிராக முதன் முதலில் போர்க்கொடி உயர்த்தி எதிர்ப்பு அணிக்கு தலைமை வகித்த ஓ. பன்னீர் செல்வத்தை மனதில் வைத்தே இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவரை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் ஆதரவாளர்களிடம் தெரிவித்து சென்றார். இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு அணிக்கு உற்சாகம் அளித்துள்ளது. ஓ.பி.எஸ் அணி எம்.ல்.ஏக்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ஓட்டெடுப்பு நடைபெறாமல் தள்ளிப்போகும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் அமைதி காத்து செயல்பட்டதால் எதிர்அணியின் முயற்சி எடுபடவில்லை.

இந்த நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.எல். ஏக்களை மீண்டும் அ.தி.மு. கவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க ஒற்றுமையுடன் ஒரு அணியாக இருக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் வாக்கெடுப்புக்கு முன்பு இரு அணியினருடன் பேச்சு நடத்தினார்கள். ஆனால் காலம் கடந்து விட்டதால் அதற்கு பலன் இல்லை. தற்போது வாக்கெடுப்பு முடிந்த நிலையில் மீண்டும் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சி நடக்கிறது. ஓ.பி.எஸ். அணியில் இருக்கும். எம்.எல்.ஏக்களையும் மூத்த நிர்வாகிகளையும் மீண்டும் இழுக்கவும் முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. ஓ. பன்னீர் செல்வம் தவிர மற்ற எம்.எல்.ஏக்களை ஒன்று சேர்க்கும் முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் தனிமைப்படுத்தப்படும் ஓபிஎஸ், எப்படியாவது சின்னம்மாவை சந்தித்து தனது டிரேடு மார்க் காலில் விழும் யுக்தியை பயன்படுத்தி மன்னிப்பு கேட்க இருப்பதற்காக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சின்னம்மாவை குளிர வைக்க காலில் செருப்பு போடாமல் பெங்களூர் சிறை வரை நடைபயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து, ஓபிஎஸ் தவிர அவருடன் மற்ற எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனை ஓரிரு நாட்களில் சந்திக்க இருப்பதாகவும். ‘வாறிய‘ தலைவர் பதவிகள் அவர்களுக்கு காத்திருப்பதாகவும் தெரிகிறது.

There are no comments yet