சென்னை: ஊடகங்கள் சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த வன்முறை சம்பவங்களை ஊதிப் பெரிதாக்கக்கூடாது என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலப்பரீட்சை சட்டப்பேரவையில் நடந்த போது உண்டான கலவர காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தேன். காலையிலிருந்து எம்.எல்.ஏக்களின் தொடர் அமளியால் சட்டப்பேரவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வீரமணியிடம் கலந்து ஆலோசிக்காமல் நான் துணிச்சலாக சொல்கிறேன். திராவிட கழகம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் இல்லையென்றால் சும்மா இருக்க வேண்டும். இது அனைத்து திராவிட இயக்கத்துக்கும் பொருந்தும். ஊடகங்கள் சம்பவங்களை மிகவும் ஊதிப் பெரிதாக்கக்கூடாது. இதற்கு முன்னும் மோசமான சம்பவங்களை தமிழக சட்டப்பேரவையில் பார்த்துள்ளோம். சோம்பேறிப் புரட்சியாளர்கள் (நான் உட்பட) இப்போது மட்டும் ஏன் அதிர்ச்சிடைய வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.

வாக்கெடுப்பின் போது நடந்த வன்முறை என் படங்களில் (விருமாண்டி, தேவர்மகன் உதாரணம்) வரும் நெஞ்சைப் பதற வைக்கும் தலை, கை கால் துண்டிப்பு காட்சி களை விட குறைவு தான்.. என்றும் கூறினார். இப்படிக் கூறும் கமல் ஒரு ஏமாற்றுக்காரர் என கப்ஸா நிருபர் கண்டறிந்துள்ளார். கமல்ஹாசன் பல முறை தேர்தலில் வாக்களிக்கவில்லை. அதை சமாளிக்க…மீடியாக்களிடம் வாக்காளர் பட்டியலில் தன் பெயரை நீக்கி விட்டதாக பொய் சொல்லி நாடகம் நடத்தியதோடு மட்டுமில்லாமல்.தான் தயாரித்த ‘உன்னைப் போல் ஒருவன்’திரைபடத்தின் கதை வசனத்திலும் “” அய்யகோ என் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து தூக்கிட்டாங்க” என்று ஒப்பாரி வைத்தார்.

சம்பந்தப்பட்ட அதிகாரி லிவிங் டு கெதர் கவுதமி பெயரும் அருகில் இருக்கும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கமல் சொன்ன பொய்யை அம்பலபடுத்தினார். நான் ரொம்ப கோபக்காரன், அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்றும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு கேவலமா போய்விட்டது அரசியல் இப்போது. வீட்டை விற்று விஸ்வரூபம் படம் எடுத்து அம்மா ஆட்சியில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்ட போது, நாட்டை விட்டு ஓடிப்போய்டுவேன்னு சொன்னவரெல்லாம் அரசியல் பேசுகிறார்கள். தமிழக அரசியலின் இன்றைய நிலைமை “வர வர மாமியா கழுதை போல ஆனாளாம். என்பது போலவும், கமல் ஹாசன் போன்ற சோம்பேறிப் புரட்சியாளர்கள் “வேலை இல்லாத மாமியார் மருமகனை தொட்டிலில் போட்டு தாலாட்டிய கதையாக” பட வாய்ப்பு இல்லாத போது அரசியலையும் அரசியல் பிரபலங்களை சீண்டுவதும் வழக்கமாகி விட்டது என்றார் உங்கள் நியூசின் கப்ஸா நிருபர்.

பகிர்

There are no comments yet