சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால், சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டனர். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டை கிழிந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்டாலினின் சட்டை கிழிந்ததை தாங்கிக் கொள்ள முடியாத கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் தி.மு.க. செயலாளர் வடிவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்டாலின் நமது கப்ஸா நிருபரிடம் கூறும்போது: எனது கிழிந்த சட்டையை தொலைக்காட்சியில் பார்த்த கழக உடன்பிறப்புகள் மிகவும் பதற்றமடைந்து என்னை தொலைபேசி மற்றும் கைபேசி வாயிலாக தொடர்ந்து விசாரித்து உடனே சட்டை பொத்தானை போடுங்கள் என்று கூறிவருகிறார்கள். மேலும் இது வரை எனக்கு ஒரு டஜன் சட்டை மற்றும் வேட்டிகளை வாங்கி அனுப்பியிருக்கிறார்கள்.
மேலும் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்வது, திமுகவின் கலாச்சாரம் இல்லை. தீக்குளித்தால் தான் இன்னும் நல்ல விளம்பரம் கிடைக்கும். இந்த பினாமி ஆட்சியில் கெரசின் கிடைப்பதில்லை, மோடியின் ஆட்சியின் பெட்ரோல் விலை ஏறி விட்டது. அதனால் தான் கலைஞரின் உடன்பிறப்புகள் தூக்கு மாட்டி சாகின்றனர். என்னால் உடன் பிறப்புகள் தீக்குளிக்க ஏதுவாக மலிவு விலையில் கெரஸினும், பெட்ரோலும் கிடைக்க அடுத்த கழக ஆட்சியில் ஆவண செய்வோம்.
சட்டசபையில் அவை காவலர்கள் எப்படியும் வெளியேற்றிவிடுவார்கள் என்ற சூழ்நிலை வந்தபோது, “எங்களை வெளியேற்றினால் தற்கொலை செய்துவிடுவோம்” என்று மிரட்டல்விடுத்தோம். நானும், துரைமுருகனும் “எங்களிடம் பிளேடு உள்ளது. நீங்கள் தொட்டால், வெட்டிக்கொள்வோம்” என்று எச்சரித்தோம். அப்படியும் எங்களை வெளியே தூக்கி போட்டுவிட்டார்கள். அந்த பிளேடை வைத்துதான் எங்கள் சட்டைகளை வெட்டிக்கொண்டு வெளியே போய் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தேன். எனவே தொண்டர்களை இனிமே என்னை பிளேடு ஸ்டாலின் என்று அழைக்க வேண்டுகிறேன் என்று கூறி , என் கட்சி மாவட்ட செயலாளர் பிளேடு பக்கிரியை சந்தித்து அடுத்த எங்கு பிளேடு போடலாமா என்று ஆலோசனை செய்ய விரைந்தார். .
There are no comments yet
Or use one of these social networks