சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசை பினாமி அரசு என்று குற்றம் சாட்டினார். குற்றவாளியின் (சின்னம்மா) பினாமி ஆட்சி மக்கள் ஆட்சி ஆகும் வரை மக்கள் மன்றத்துடன் இணைந்து திமுக களம் காணும் என்று தெரிவித்தார். சசிகலாவின் பினாமி ஆட்சியை எதிர்த்தும் பிப்ரவரி 22ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டம் தமிழக மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படுகிறது. திருச்சியில் நடைப்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இது நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டமாக நடைப்பெற உள்ளது என்றார்.

இதனையடுத்து கப்ஸா நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்தார். கருணாநிக்கு வயது மூப்பு காரணமாக சில சங்கடங்கள் உள்ளன. உபாதைகள் உள்ளன. அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். உடல்நலம் பாதிப்பில் இருந்து கருணாநிதி மீண்டு வருகிறார் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பழையபடி ‘புரளி’ பேசுவதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். ‘அ’ என்றால் ‘அஞ்சுகம்’ என்கிறார், ‘ஆ’ என்றால் ‘ஆட்சிக் கட்டிலில்’ படுக்க வேண்டும் என்கிறார். ‘இ’ க்கு இனமானம் என்றும் ‘உ’க்கு உடன்பிறப்பு என்றும் சங்கு ஊதும் நிலை வந்ததை மறந்து ‘ஊ’ விற்கு ‘ஊழல்’ என்கிறார். விரைவில் ‘குணா’ நிலை அடைவார் என எதிர்பார்க்கிறோம் என்றார். பழையபடி கலைஞர் போல பேசா விட்டாலும் சோம்பேறிப் புரட்சியாளர் கமல்ஹாசன் போலாவது குழப்பிப் பேசினால் கூட பரவாயில்லை. அல்லது விஜயகாந்த் போல குழறினாலும் தேவலை. பேச்சையே மூலதனமாக வைத்து தமிழகத்தை சுரண்டிய கலைஞருக்கே பேச்சு பயிற்சி என்பதை நினைக்கும் போது மிகவும் துக்கமாக உள்ளது என்று உருக்கமாக சொன்னார்.

பகிர்

There are no comments yet