சென்னை: சட்டசபை வாக்கெடுப்பின் போது தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டதாகச் சொல்லப்படும் ஸ்டாலின் மெரினாவில் அவர் தர்ணா செய்தபோது போலீசார் அவசர அவசரமாக வெளியேற்றியதால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல சட்டசபை கலவரத்தையும் ஊதிப் பெரிதாக்கி, தொடர்போராட்டமாக கொழுந்து விட்டு எரியவிட்டு, மாணவர்களையும், பொதுமக்களையும் முட்டாளாக்கி குளிர்காய நினைத்த திமுக முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது. இந்த கசப்பான உண்மை மூளைக்கு தெரிந்தாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

போராட்டக்கார இளைஞர்கள் என்ற போர்வையில் சம்பளம் கொடுக்காத துணை நடிகர்களாக வந்து நடித்துக் கொடுத்து விட்டு போனவர்கள் அவர்கள். ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுத்த பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, சின்னம்மா கட்டுப்பட்டில் பன்னீர்செல்வம் ஆண்ட போதும் கூட, காவல் துறை போராட்டத்திற்கு ஒத்துழப்பு கொடுத்தனர். பின்னர் காரியம் முடிந்ததும், வன்முறையை நிகழ்த்திக் காட்டி எரிக்க வேண்டியதை எரித்து போராட்டத்தை முடித்தனர்.

அனால் அதற்குப் பிறகு, அதே மெரினாவில், ஜெயா சமாதியில் தியானம் இருந்து தெளிர்ச்சியம் முதிர்ச்சியும் பெற்ற பன்னீர்செல்வத்திடம் சில கேள்விகளை ஊடகங்கள் கேட்க மறந்தன. சட்டசபையில் பன்னீரை திமுக சப்போர்ட் செய்ததும், பன்னீர் திமுகவிற்கு வக்காலத்து வாங்கியதும் அடிப்படை அதிமுகவினரால் ரசிக்கப்படவில்லை. அதிமுக என்ற மாபெரும் இயக்கமே திமுக எதிர்ப்பு என்ற ஒரே கொள்கையுடன் துவங்கப்பட்டதுதான், அந்த ஒரே கொள்கையையும் பன்னீர் குழி தோன்றி புதைத்துவிட்டார் என்று ஆதங்கப்படுகின்றனர் அதிமுக விசுவாசிகள்.

ஓபிஎஸ்சின் அரங்கேற்றமான சசிகலா எதிர்ப்பு/அதிமுக உடைப்பு நாடகத்தின் இயக்குனர் ஸ்டாலினாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார் ஒரு அரசியல் விமர்சகர், அவர் பன்னீர் முன்பு வைக்கும் 13-கேள்விகள் இதோ

1. பதவிப்பிரமாணத்தில் எக்காரணம் கொண்டும் அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிராக நடக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் செய்த பன்னீர் சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பங்கள் கூறியதும் ராஜினாமா கடிதம் எழுதிக்கொடுத்தது என்ன குல தெய்வத்துக்கு வேண்டுதலா?

2. ஜெயலலிதா தன் மறைவிற்கு பிறகு மதுசூதனனை கழக பொதுச்செயலாளராக்க விரும்பினார் என்ற உண்மையை கூற 60 நாட்கள் காத்துக் கொண்டிருந்தது ஏன்?

3. டிச 29 நடந்த அதிமுக செயற்குழுவில் மதுசூதனன் தம்பிதுரை புடைசூழ சின்னம்மா காலில் விழுந்து பொதுச்செயலாளராக ஆகச்சொன்னது ஏன், கோமாவில் இருந்தாரா?

4. சின்னம்மா தரப்பினர் யாரையுமே அனுமதிக்காத பட்சத்தில், செப்டம்பர் 22, 2016 முதல் பிப்ரவரி 7, 2017 வரை ஊமையாக நடித்தது ஏன்.

5. அவர் ஜெயலலிதாவை சந்திக்காத பட்சத்தில் எப்போது மதுசூதனனை பொதுச்செயலாளராக ஆக்கச்சொன்னார். அப்பல்லோவில் அம்மாவிடம் காற்றோடு காற்றாக கலந்து போய் பேசினாரா, அல்லது அம்மா குரலில் அசரீரி ஒலித்ததா, அல்லது டெலெபதியிலா?

6. அப்பல்லோவில் அம்மா சிகிச்சை பெற்ற போது பேசா மடந்தையாக இருந்தார், அப்படி என்றால் ஜெயா மர்ம மரணத்தில் அவருக்கும் பங்கு உண்டா?

7. பிரதமர் மோடியை பலமுறை சந்தித்த பொதும், வாய்ப்புக்கள் இருந்தும் ஜெயா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அப்போதே ஏன் சொல்லவில்லை

8. சின்னாம்மா உனக்கு சாதாரண அமைச்சர் பதவி கூட இல்லை என்று விரட்டி விட்ட பிறகு இந்த தியானம் ஞானம், புரட்சி எண்ணம் வந்ததா?

9. ஜெயலலிதாவால் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட சின்னம்மா கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டேன் என்று எழுதிக் கொடுத்த கடிதத்தை ஏன் பொதுச்செயலாளர் டிராமாவின் போது பன்னீர் சுட்டிக் காட்டவில்லை, எழுதப்படிக்கத் தெரியாதவரா?

10. சி.ஆர் சரஸ்வதி, பொன்னையன் போன்றோர் அம்மா இட்லி சாப்பிட்டார்கள், பூரி சாப்பிட்டார்கள் , என்று உப்புமா கதை விட்டபோது ஓபிஎஸ் எங்கே போயிருந்தார்

11. தியான தர்ணா செய்யும் வரை தன்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்க சதி நடக்கிறது என்று அவருக்கே தெரியாதா, பேப்பர்களும் டிவிக்களும் கிழி கிழி என்று கிழித்தனவே. அவருக்கு மாலைக்கண் நோயா?

12. டிச 6 முதல்வர் பதவி ஏற்றுக் கொண்ட பன்னீர் ஜெயா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கூறுவதற்கும், கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அறிவிக்கவும் எதற்காக 70 நாட்கள் காத்திருந்தார்?”

13. பிப்ரவரி 7-ல் 40 நிமிட தியானம் மீடியாவின் கவனத்தை தீர்ப்பவா அல்லது அம்மாவின் ஆன்மா வை கண்டுபிடிக்க 40 நிமிடம் ஆனதா

இந்த எல்லா கேள்விகளுக்கும், எல்லோருக்கும் விடை தெரியும், அது பதவி வெறி என்பதுதான். ஆனால் என்ன செய்வது, சசிகலாவை எதிர்க்க வேண்டும் என்று இவர்களை ஆதரித்துக் கொண்டு இருப்பது நமது தலைவிதி.

மற்ற ஆதாரங்கள்Kadapara Mani
பகிர்

There are no comments yet