பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவின் பக்கத்து அறை கைதியாக இருந்த ‘சயனைடு’ மல்லிகா என்னும் பயங்கர கொலைக் குற்றவாளி வேறு சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா அவருடைய உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் சசிகலாவின் பக்கத்துக்கு அறையில் அடைக்கப்பட்டுள்ளவர் கொடூர கொலைக்குற்றவாளியான ‘சயனைடு’ மல்லிகா. இவரின் இயற்பெயர் கெம்பம்மா. பெங்களூரு அருகேயுள்ள கோயில் ஒன்றின் ரெகுலர் பக்தை இவர். அந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளின் கஷ்டத்தை அவர்களிடம் பேசி தெரிந்து கொள்வார். அப்படி வரும் பக்தர்களில் வசதியுள்ள பணக்கார பெண்களாக பார்த்து ஆறுதலளிக்கும் விதத்தில் அவர்களிடம் மல்லிகா பேசுவார். மேலும் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினால் எல்லாம் சரியாகி விடும் எனக் கூறுவார். அதற்குத் தனியாக வர வேண்டும் என்பார். அப்படி வரும் பெண்களுக்கு சயனைடு கலந்த தண்ணீரை கொடுத்து, கொலை செய்து, நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விடுவார். ஆறு பெண்களை மல்லிகா கொலை செய்துள்ளார். சயனைடு கலந்து கொலைசெய்ததால், இவர் ‘சயனைடு மல்லிகா’ என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது சசிகலாவின் உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் இருப்பதாக அதிமுகவினர் கருத்து தெரிவித்ததால் கடந்த வாரங்களில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து மல்லிகா தலைப்புச்செய்திகளில் இடம் பிடித்தார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக சயனைடு மல்லிகாவை பெலகவியில் உள்ள ஹிண்டல்கா சிறைச்சாலைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றம் செய்யும் முயற்சியில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு கர்நாடக சிறை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். இது குறித்து சின்னம்மாவை ச ந்தித்த கப்ஸா நிருபர் கூறியதாவது. “நான் என்னை புழல் சிறைக்கு மாற்ற அனுமதி கேட்டேன், ஆனால் சயனைடு மல்லிகாவை வேறு சிறைக்கு மாற்றி விட்டனர். அவரது உயிருக்கு என்னால் ஆபத்து என்கின்றனர். நான் கூறிய 75 நாள் மயிர்க் கூச்செரியும் அப்பல்லோ திகில் அனுபவங்களை கேட்ட சயனைடு தான் பயந்து போய் விட்டாள். இரவும் பகலும் தூக்கம் வராமல் பிதற்றியதாக வார்டன் கூறினார். சிறையை விட்டு வெளியே வந்ததும், மல்லிகாவை ரிலீஸ் செய்து என அமைச்சரவயில், பா.வளர்மதி, கோகுல இந்திரா போல் உருவாக்கி கொ.ப.செ பதவி கொடுக்கிறேன் என்று கூறி வைத்திருந்தன். அதற்குள் அவசரப்பட்டு வேறு ஜெயில் கேட்டு போய் விட்டாள் என்று, “சிக்கிய ஒரு அடிமை எஸ்கேப் ஆகி விட்டதே” என்று நீலிக் கண்ணீர் வடித்தார்.
There are no comments yet
Or use one of these social networks