சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற சட்டை கிழிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். இது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கெளரவ் என்ற டைரக்டர் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று மட்டும் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். முதல் வரிசையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியம், நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோருடன் அவர் அமர்ந்திருந்தார். இதனால் அரசியலில் களம் காணவுள்ளார் உதயநிதி என்று சமூக வலைதலங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முன்னதாக, “எனக்கு அரசியல் ஆசை கிடையாது. திமுகவில் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றியவர்கள் பலரும் இருக்கிறார்கள். எப்போதுமே அரசியலில் எனக்கு ஆர்வமில்லை” என்று பேட்டி ஒன்றில் உதயநிதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமல்லாமல் சென்னை கோடம்பாக்கத்தில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா, திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்ளிட்ட திமுக மகளிர் அணியினர் பங்கேற்றனர். இது குறித்து திருச்சியில் உண்ணாவிரதம் என்று புல் கட்டு கட்டிக்கொண்டிருந்த கிழியாத மின்னலடிக்கும் வெண்மைச் சட்டையுடன் செயல் தலைவர் ஸ்டாலின் நமது கப்ஸா நிருபரிடம் பேட்டி அளித்தார். “ஜெயலலிதா மரணத்தை துப்பு துலக்கினால் சின்னம்மாவுக்கு ஆயுசு முழுக்க ஜெயில் களி தான். இட்லி அவித்தவர்களும் வீட்டை பெருக்கியவர்களும் ஒரு கட்சிக்குப் பொதுச்செயலாளர் ஆகும்போது, சொந்த மகன் சினிமாவில் நடிப்பதும் கட்சிக்கு உழைப்பதிலும் என்ன தவறு இருக்கிறது. விஜய் போன்ற டப்பாங்குத்து டான்ஸ் ஆடும் நடிகர்களுக்கு போட்டியாகத்தான் என் மகனை நடிகனாக உருவாக்கி, மக்கள் பணத்தை வைத்து படமெடுத்து கொடுமைப் படுத்துகிறேன்.

திருட்டு ரயில் ஏறி வந்து தமிழகத்தை சூறையாடிய தமிழ் ஈன தலைவர் வழியில் நான் சென்னை மேயராகவும், துணை முதல்வராகவும் வாரிசு அரசியல் செய்தேன். என் அண்ணன் அழகிரி மதுரையில் முடிசூடா மன்னனாக கட்டப்பஞ்சாயத்து, வன்முறை என்று கோலோச்சுகிறார். கனிமொழி ராசா இருவரும் காற்றை கொள்ளையடித்து சயிண்டிபிக் முறையில் சாதனை புரிந்தனர். மாறன் சகோதரர்களோ இன்னொரு அம்பானி அதானி ஆகும் அவதானிப்பில் கடும் உழைப்பால் உயர்ந்துள்ளனர். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம், சீக்கிரம் பசி வந்துவிடும், இன்று பிரியாணி பொட்டலம் கொஞ்சம் லேட் ஆகும் என்று சொன்னார்கள். என்னை பொறுத்தவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கூட்டம் கூட்ட ஒரு கதாநாயகன் தேவைப்பட்டார், அவர் வந்து எங்களை போல நடித்துவிட்டு போயிருக்கிறார் அவ்வளவுதான்” என்று உதட்டை சுழித்துக் காட்டி சிரித்தார்.

பகிர்

There are no comments yet