கோயம்புத்தூர்: இன்று 24-ம் தேதி சிவராத்திரியன்று, பிரதமர் மோடி கோவை ஈஷா யோக மையம் வருகிறார். அப்போது 112 உயர சிவன் சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக அங்கு பிரத்யேக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 7 மொழிகளில் 23 சேனல்களுக்கு இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஈஷா யோக மையத்தின் மீது நில அபகரிப்பு வழக்கு, யானை வழித்தடத்தை அழித்தது உள்ளிட்ட வழக்குகள் இருக்கின்றன.

இந்நிலையில் அக்காவை அப்பல்லோவில் பார்க்க வராத மோடி, சாதாரண சுவாமி சிலை திறப்பிற்கு வருகிறாரே என்று பெங்களூர் சிறையில் சின்னம்மா வருத்தத்தில் இருப்பதாக வந்த செய்தியை அடுத்து நமது கப்ஸா நிருபர் பெங்களூர் பார்ப்பன அக்கிரகார சிறையில் சின்னம்மா முன்பு ஆஜரானார். துக்கத்தில் நிருபரிடம் படபடவென்று அள்ளிக்கொட்டினார் சின்னம்மா. அவர் கூறியதாவது: ​நான் இல்லாத போது தமிழகத்திற்கு மோடி வருகிறார் என்று கேள்விப்பட்டேன், எதற்காக வருகின்றார் என்றால் அங்கு ஏதோ ஈஷா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை திறப்பாராம். சமீபத்தில் கன்னியாகுமரியில் ராமயாண சிலைகளை அவர் டெல்லியிலிருந்தே வீடியோவில் திறந்தது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் பெரும் தொழிற்சாலை, ஒரு பாலம், ஒரு எய்ம்ஸ் போன்ற மருத்துவமனை, அணைகட்டுக்கள், பெரும் அறிவியல் கழகங்களை ஒரு பிரதமர் திறக்கின்றார் என்றால் அது பாராட்டதக்கது
நேரு, இந்திரா எல்லாம் அதனைத்தான் தமிழகத்திற்கு செய்தார்கள்,மாறாக விவேகானந்தர் பாறை கட்டங்களில் கூட அந்த பிரதமர்களின் அக்கறை இருந்ததில்லை. அவர்களுக்கு இதனை எல்லாம் விட நாட்டில் நிறைய முக்கிய காரியங்கள் இருந்தன‌. ஆனால் நம் துரதிருஷ்டம் மத அடையாள சிலைகளை திறக்கும் பிரதமர் நமக்கு வாய்த்திருக்கின்றார். இன்னும் என்னென்ன சாமி சிலைகளை இந்த ஆசாமி தமிழகத்தில் திறக்கபோகின்றாரோ தெரியவில்லை.

இதனால் தமிழக மக்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் உலகெல்லாம் சுற்றும் பாரதபிரதமர் தமிழகம் வருவதற்கு என்ன செய்யவேண்டுமென்றால் இந்து கடவுள்கள் அல்லது யோகிகளின் சிலையினை கட்டினால் போதும், மனிதர் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார். மற்றபடி எந்த பிரச்சினை என்றாலும் அவர் தமிழகத்திற்கு வரவே மாட்டார். அக்கா அப்பல்லோவில் 70 நாட்களை இருந்தபோது ஒருநாளாவது வந்து பார்த்தாரா இந்த மனுஷன். அவை பேச்சை கேட்டுத்தான் இந்த கவர்னர் காலம் கடத்தி என்னை முதல்வர் பதவியேற்கவிடாமல் இங்கே சிறையில் கொண்டுவந்து தள்ளிவிட்டார்கள். அக்கா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா என்று ஒப்பாரியை தொடர்ந்தார்.

There are no comments yet