சென்னை: என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு மறுபடியும் நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உதவி செய்து வருகிறேன் என்று விஷால் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் அருகில் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் இடையே அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் வழங்கினார். ஒவ்வொரு முறை ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது எங்கே போகிறோம், எதற்காக போகிறோம் என்று திட்டமிட்டே செல்கிறேன். எனக்கு அணிவித்த சால்வைகளை எல்லாம் விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தில் இன்னும் ஒரு குழந்தையை படிக்க வைப்பேன். நீங்கள் பணம் கொடுத்து டிக்கட் வாங்கி என் படத்தை பார்ப்பதனால் நான் இந்த இடத்தில் இருக்கிறேன். என்று பேசியுள்ளார்.

உங்கள் நியூஸ் டீம் விசாரித்ததில் ‘விஷாலின் விஷயமே வேறு’ என்று தெரிந்தது. சமீபத்தில் ஸ்டாலின் சட்டைக் கிழிப்பு உண்ணாவிரததில் உதயநிதி ஸ்டாலின் முன் வரிசையில் அமர்ந்திருந்த செய்தியை ஒரு உதவி இயக்குனர் மூலம் விஷால் தெரிந்து கொண்டிடுருக்கிறார். உதயநிதி உண்ணாவிரத படம் காட்டியதுபோல், ஆதரவற்ற சிறுவர்களுக்கு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தலையில் காந்தி கணக்கு எழுதிவிட்டு பொருட்களை பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார் அணியினர் விஷாலை நீக்கியது முதலே மனுஷன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். போதாக் குறைக்கு வரலட்சுமியின் லிவிங் டுகெதர் ப்ரேக் அப், அவர் நடித்த பட்ங்களின் தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் இணைய தளம் ஆகிய பிரச்சினைகள் வேறு.

எனவே நடிகர் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் கன்னத்தில் அறை வாங்கியதுடன், வெற்றி பெற்ற அனுபவம், நட்ச்சத்திர கிரிக்கெட்டில் நாசருடன் இணைந்து செய்த 3 கோடி ஊழல், நடிகர் சங்கக் கட்டிடம் கட்ட வாங்கிய நிலத்தை அபகரித்தது போன்ற அனுபவங்களையும் வைத்துக் கொண்டு அரசியலில் களம் காண படப்பிடிப்புக்கு போகும் ஊர்களில் என்ன மாதிரி அரசியல் டுவிஸ்ட் கொடுக்க முடியும் என்று யோசித்து தாயாரிப்பாளர் செலவில் தர்ம காரியங்களை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக கோடம்பாக்கம் குருவி ஒன்று தெரிவிக்கிறது.

பகிர்

There are no comments yet