சென்னை: உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து இப்போது ஏதும் கூற இயலாது, அனால் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு மதிமுக தலைவர் நமது கூறினார். இது குறித்து நமது கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு ஒப்புதல் அளித்து, 04.01.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது.

மீத்தேன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன் தொடர்ச்சியாக, மீத்தேன் திட்டத்தை எதிர்த்து 2014 டிசம்பர் மாதம் 10 நாட்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரத்தை நான் மேற்கொண்டேன். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடந்து வரும் வழக்கில், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்திடக்கோரி நானே வாதாடினேன்.

கடந்த பிப்ரவரி 15–ந்தேதி, மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயல்படுத்த முடிவு எடுத்து இருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் வேறுபாடு இல்லை. எனவே, தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்துசெய்யக்கோரியும், ம.தி.மு.க. சார்பில், என் தலைமையில், 28–ந்தேதி பகல் 11 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக இப்போது இல்லை. எனவே உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்து வருகிறேன். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மிகவும் துடிப்பானவர், அவரையும் கூட்டணியில் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறோம். இனி முடிவு எடுப்பது அவர் கையில்தான் உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்றார். இதனிடையே வைகோ அழைப்பை அடுத்து தனது பெயரில் உள்ள பேரவையை கலைக்க தீபா திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகாத செய்திகள் தெரிவிக்கின்றன.

There are no comments yet