சென்னை: ஜெயலலிதா இறந்த பிறகு சற்றே ஆண்மை வந்தது போல் நடிக்கும் நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போராட்டம், அரசியல் சூழல் உள்பட தமிழகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்து பதிவிட்டு வருவது வழக்கம். ஆனால் அவரது டிவீட்டுகள் சாதாரண தமிழ் அறிவு கொண்ட எவர்க்கும் புரிவது இல்ல என்ற குறை அனைவரின் மனதிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கமல் தனது குடும்பத்திற்கு மட்டும் தெரிந்த “அபோகலிப்டோ” மொழியில் ட்விட்டரில் எழுதுகிறார் என்ற கோபத்தில் இருந்த அதிமுகவை சேர்ந்த கவிஞர் சித்ரகுப்தன் கமலை சாடி “சகலகலா சண்டாளனே” என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி உள்ளார். அதை நமது கப்ஸா நிருபர் கீழே மறுபதிப்பு செய்கிறார்:
டுவிட்டரில் நித்தம் புலம்பும் துஷ்டனே!
மகளின் எதிர்காலம் கருதியே பிரிகிறேன் என கவுதமியும் ஓடிவிட,
அடுத்ததாக அஷ்டமி நவமியாவது அகப்படுமா என திரிஷாவுக்கு பீட்டா கொக்கி போட்ட கஷ்டனே..
காதலி கிடைக்காத கடுப்பில் கழகத்திடம் எரிந்து விழும் காதல் கிழவரசனே!
பெண்களுக்காக என் வீட்டு வாசல் என்றும் திறந்திருக்கும் என்ற காமக் கொடூரனே!
“சாகர்’ படத்தின் சரிகா சந்திப்பை சந்தர்ப்பமாக்க
ஜப்பானில் கல்யாணராமன் படப்பிடிப்பை வாணி கணபதியின் கர்ப்பத்தை கருவறுக்கும் வாய்ப்பாக மாற்றி…
கர்ப்பிணியை ராட்சத ராட்டினத்தில் ஏற்றி அதன்மூலம் கர்ப்பப் பையையே அகற்றி மலடிப் பட்டம் சூட்டி துரத்திய உத்தம வில்லனே..
சிலிம்ரனோடு சிலகால ஜலக்கிரீடை நடத்த… பெற்றெடுத்த பிள்ளைகளோடு இரவெல்லாம் கழிவறைக்குள் சரிகாவை அடைத்து வைத்து இம்சித்து…
பின் கல்யாணம் முடித்துப் போன கவுதமிக்கு தேவர் மகனில் லிப்லாக் கொடுத்து வீட்டுக்குள் 13 வருடம் லாக் செய்து வைத்தவனே!
அதுவும் புளித்துவிட…மணாளனே மருககன் ஆகிட ஆசைப்பட்ட மானங்கெட்ட மன்மத வம்பனே…
‘நாயகன்’ படத்து முக்தா சீனிவாசன் விட்டால் போதுமென விடுபட்டு ஓடிவிட…
மீதியை எடுத்த ஜீவியின் ஆவியையே உருவி எடுத்த அற்பனே!
‘அந்த ஒரு நிமிடம்’ என உன்னைப் போட்டு சினிமா எடுத்த மேஜர் சுந்தர்ராஜன் நிம்மதி தொலைந்ததே அந்த ஒரு நிமிடத்தில்தான்…
டைரக்டர் ஸ்ரீதர் எனும் முதலாளி உன்னை வைத்து ஒரு படம் எடுத்து ‘நானும் ஒரு தொழிலாளி’ என நசிந்து போனதை நாடறியும் அற்பனே!
‘சூரசம்ஹாரம்’ எடுத்த சித்ரா லட்சுமணன், ‘சிங்காரவேலன்’ எடுத்த ஆர்.டி.பாஸ்கர்… ‘ஆளவந்தான்’ படம் எடுத்து என்னை அழிக்க வந்தான் என்று அழுது புலம்பும் கலைப்புலி தாணு…
‘அன்பே சிவம்’ எடுத்து சவமாகிப் போன முரளிதரன்… ‘மன்மதன் அம்பு’ எடுத்து மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ஜெமினி பிலிம்ஸ்…
கலைஞன் – வெற்றிவிழா என சிவாஜி பிலிம்சையே சீரழித்து நடிகர் திலகம் குடும்பமே நட்டாற்றில் நிற்கவைத்து பிரபுவையும் எடுபிடியாக வசூல்ராஜாவில் வாய்ப்பிழக்க செய்து..
‘மகாநதி’ என்று எஸ்.ஏ. ராஜ்கன்னுவை மகாகூவத்துக்குள் மூழ்கடித்த மகா கேவலனே! ‘குணா’ படத்தயாரிப்பாளரை குணாவாகவே மாற்றி, லிங்குசாமியின் மொத்த வித்தையையும் ஒரே படத்தில் உருவி எடுத்து…
பத்து லட்சமே பணம் கொடுத்து, பாலசந்தரை அவமதித்து…
அவ்வளவு ஏன், எடுக்காத ‘மருதநாயகத்தை’ வைத்து எலிசபெத் ராணியையே ஏமாற்றிய எத்தனே!
உன்னால் அழிந்தவர்கள் பட்டியல் நீ வாழும் தொகுதியின் வாக்காளர் பட்டியலை விட நீளும்…
உன்னை வைத்து ‘சவால்’ எடுத்த சுரேஷ் ஆர்ட்ஸ் பாலாஜி துப்பாக்கியை எடுத்துக் கொண்டு துரத்திய போதே சரியாக குறி பார்த்திருந்தால் எண்ணற்றோர் வாழ்க்கை எப்போதோ தப்பியிருக்கும்..!
என்று முடித்துள்ளார். இதற்கு கமல் என்ன சொல்லப் போகிறார்?
There are no comments yet
Or use one of these social networks