போட்டோ தாங்க்ஸ் : தி ஹிந்து

 சென்னை: சீமைக்கருவேல மரங்களை வெட்ட அனுபமிக்க ஆட்களை கொண்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வென்றும் என்று அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது : சீமைக்கருவேல மரங்களால் இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். நிலத்தடி நீரை மிக அதிக அளவில் உறிஞ்சுவதால், அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் அந்தப் பகுதி பாலைவனமாகிவிடும் ஆபத்து உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த மரங்களை அகற்றும் பணியில் இளைஞர்களும், பொதுமக்களும் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. அடியோடு வெட்டி வீழ்த்தினால் அம்மரங்கள் அழிந்து விடும் என்ற எண்ணத்தில் அவற்றை மக்கள் வெட்டி சாய்த்து வருகின்றனர். 

பாமகவின் மரம் வெட்டும் ஆற்றல் தமிழத்தின் அனைவர்க்கும் தெரியும். பாமக தொண்டர்களுக்கு மரம் வெட்டுவதில் 30-ஆண்டு கால அனுபவம் உள்ளது. முன்பு போல் இல்லாமல் சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாமகவினர் மரம் வெட்டும் தொழில் முன்னேறி உள்ளனர். எனவே கருவேல மரங்களை வெட்டுவதற்கான மொத்த கான்ட்ராக்டை எங்களுக்கே கொடுத்தால் வரும் உள்ளாட்சி தேர்தல் செலவுக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும் என தமிழக அரசை கோருகிறேன் என்று கூறினார்.

இது குறித்து கருத்துக் கூறிய பாமக தொண்டர், எங்கள் கட்சியைப் போல் சீமைக்கருவேல மரங்கள் இனி எந்தக் காலத்திலும் துளிர்த்து வளர முடியாத அளவிலும் அழிக்கப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதலும், தொழில்நுட்பமும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். எங்களை போன்ற சாதிக் கட்சிகள் ஆன சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதால் பயனில்லை; அழிப்பதால் தான் பயன் என்பதை மக்கள் உணர்ந்து வரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றார். .

There are no comments yet