சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசானது முடிவு செய்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் கூறியதாவது:-

எந்தவொரு திட்டமும் மக்களுக்காகத்தான் கொண்டு வரப்பட வேண்டும். தமிழக அரசு மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்களில் டாஸ்மாக்கை தவிர வேறொன்றும் உருப்படியாக இல்லை.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அவர்களது கருத்துகளை கேட்காமல் தமிழகத்தில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது அல்ல. விவசாயிகளை கேட்டால் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியாது என்று அரசுக்கு தெரியாதா. அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே இதுபோன்ற திட்டங்கள் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற திட்டங்களை மற்ற மாநிலங்களில் கொண்டுவர மறுப்பது ஏன்?

தமிழக விவசாயிகள் ஏற்கனவே வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். டாஸ்மாக் மூடலாலும், ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டதாலும் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மேலும் அவர்களை பாதிப்பு அடையாமல் செய்ய தேன் எடுக்கும் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தி வைத்து விவசாயிகளை காப்பாற்றுவது நமது கடமையாகும். மேலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் வகையில் தமிழக அரசும் பல டாஸ்மாக் கடைகளை மூடி வருகிறது. கூட்டில் தேன் எடுக்கும் விவசாயிகள், நிலத்தில் மீத்தேன் எடுப்பதை குற்றமென்று கூறுவதை ஏற்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

There are no comments yet