சென்னை: ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 8ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், உண்ணா விரதபோராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா , குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஜெ., மருத்துவ மனைக்கு வரும் போது, சுய நினைவோடு வந்தாரா அல்லது மயக்க நிலையில் இருந்தாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெ., மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்களை போக்க,நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, தி.மு.க., உட்பட பல கட்சிகள் வலியுறுத்தி வரு கின்றன.

அ.தி.மு.க.,வில், சசிகலா குடும்பத்திற்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ள, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., தொண்டர்கள், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும், ஜெ., மரணம் குறித்து, மத்திய அரசின் நேரடி கட்டுப் பாட் டில் உள்ள, அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பன்னீர் செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள், டில்லியில் நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு கொடுத்தனர். ஏற்கனவே, அ.தி.மு.க., – எம்.பி., சசிகலா புஷ்பா, உள்துறை அமைச்சரிடம் மனு கொடுத்துள் ளார். அந்த மனு, சி.பி.ஐ.,க்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியார் வந்தார். அவர் தன்னிடம் ஜெயலலிதாவின் ஆவி பேசியதாகவும், ஓ.பி.எஸ்சை சந்திக்க வேண்டும் என்றும் அனுமதிக்காக காத்திருந்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் விசாரித்தபோது, கண்களை மூடியபடி ஜெயலலிதா ஆவி தன் மீது இறங்கி இருப்பதாகவும், அந்த ஆவி பேசுவது போலவும் பேசினார். அவர் கூறியதாவது

நான் (ஜெயலலிதா) இறந்துதான்75 நாட்களாக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தேன். தொண்டர்கள் நடத்திய பூஜைகள், பிரார்த்தனைகளை எனது ஆன்மா சொல்லியது.ஓ.பி.எஸ்சும், தீபாவும் இணைந்து எனது இயக்கத்தை வழி நடத்த வேண்டும். இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற வேண்டும். அவர் என் அன்புக்கு பாத்திய மானவர். அவருக்கு உறு துணையாக இருப்பேன்.

சதிகாரர்கள் இயக்கத்தை உடைக்க பார்க்கிறார்கள். அவர்கள் வலையில் விழுந்து விடக்கூடாது. தீபா கனவிலும் பேச நினைத்தேன். அவரது கணவரை சந்தித்து பேசினேன். அவரிடமும் எல்லா விஷயங்களையும் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதி ஓபிஎஸ் தியானயம் இருந்தபோது வந்த ஜெயலலிதாவின் ஆன்மா திரும்பி வராததால் ஓபிஎஸ் மனம் ஒடிந்து வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே அம்மாவின் ஆவி வரும்வரை மாவட்டத் தலைநகரங்களில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெறும் உண்ணா விரதத்தில், பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: பன்னீர் செல்வத்தின் காலம் கடந்த உண்ணா விரத போராட்ட முடிவை வரவேற்கிறேன். முதல்வர் பதவியில் இருந்த போது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? இருந்தாலும் ஓபிஎஸ்சின் உண்ணாவிரதம் மூலம் ஜெயலலிதாவின் ஆவி நேரில் வந்தால் நல்லதுதான் என்று கூறியுள்ளார்,

பகிர்

There are no comments yet