சென்னை: ரஜினி மகள் சௌந்தர்யா, பிப் 28 அதிகாலை தனது காரை, ஆட்டோ ஒன்றின் மீது மோதி டிரைவக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நடிகர் ரஜினகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கருத்து வேற்றுமை காரணமாக கணவரைப் பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனது வீட்டை விட்டு கிளம்பிய சௌந்தர்யா, இன்று அதிகாலை திரும்பினார். அப்போது டி.டி.கே. சாலை வழியாக, மௌபரிஸ் சாலை நோக்கி திரும்பியோது, அங்கு நின்றிருந்த ஆட்டோ மீது தனது காரை மோதிவிட்டார். இதனால் ஆட்டோ கவிழ்ந்து டிரைவருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவம் நடந்தது அதிகாலை 4.30 மணி என்பதால், சாலையில் நடமாட்டம் இல்லை. பதட்டமடைந்த சௌந்தர்யா, உடனடியாக தனது அக்காள் கணவரான நடிகர் தனுஷை மொபைலில் அழைத்து விபரம் சொல்லியிருக்கிறார். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தனுஷ், அந்த ஆட்டோ ஓட்டுநரிடம் சமாதானம் பேசி, கொஞ்சம் பணமும் கொடுத்திருக்கிறார். பிறகு ஓட்டுநரை மருத்துவமனைக்கும் அனுப்பியிருக்கிறார். பிறகு இந்தத் தகவல் நடிகர் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவரும், பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்தாராம்.

மன உளைச்சலின் காரணமாகவே சௌந்தர்யா இந்த விபத்தில் சிக்கியதாக நமது கப்சா நிருபர் கண்டறிந்துள்ளார். அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதையாக, அப்பனை நம்பி அஸ்வினை பிரிந்த சௌந்தர்யா, அப்பா கடைசி காலத்தில் தன்னை கடனாளி ஆக்கிவிட்டுப் போய்விடுவாரோ என்று மன உளைச்சலில் இருந்துள்ளார். கபாலியின் சேலம் விநியோகஸ்தர் நந்தா, மினிமம் கியாரண்டி விநியோக அடிப்படையில் 6.40 கோடிக்கு கபாலி படத்தை வாங்கியுள்ளார். விளம்பரங்கள், க்யூப் உள்ளிட்ட அனைத்துமே சேர்த்து 7 கோடி ரூபாய் அவருக்கு செலவு ஆகியுள்ளது. 3.40 கோடி மட்டும் தான் பங்கு அடிப்படையில் வந்ததாம். மீதி 3.10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டடு இருக்கிறது. அதற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் ரஜினியிடம் முறையிட்டுள்ளார். தோல்வியடைந்த படத்தை வெற்றி என்று தயாரிப்பாளர் கொண்டாடும்போது ஏற்படும் பின்விளைவுகள் கடுமையானவை. தயாரிப்பாளர் சொல்லும் வசூலை வைத்துதான் அடுத்தப் படத்துக்கான பட்ஜெட் போடப்படும். அந்த வசூல் தவறாக இருக்கும்பட்சத்தில் எவ்வளவு பெரிய இழப்பு அடுத்துவரும் தயாரிப்பாளருக்கு ஏற்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்று அவர் புலம்பியதால், தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் ரஜினி ரஞ்சித் கூட்டணியில் தயாரிக்கும் படத்துக்கு சிக்கல் உருவாகியுள்ளது அக்காள் கணவர் தனுஷை தன் கணவர் ஸ்தானத்தில் வைத்துள்ள சௌந்தர்யாவை மிகவும் பாதிதுள்ளது.

ஏற்கனவே ரஜினி குடும்பம் தயாரித்த ‘பாபா’ ‘கோவா’ சௌந்தர்யா ‘திறம்பட’ ரஜினி உடம்பில் லைட்டை கட்டி இயக்கிய ‘கோச்சடையான்’ படங்கள் பப்படமானதால் துவண்டு போயிருந்த சௌந்தர்யா, கணவரை பிரிந்த துக்கத்தில் இருந்தார். பின்னர் தனுஷ் கொடுத்த தைரியத்தில் மீண்டு வந்தார். இப்போது யாரோ சிலர் தனுஷை தங்கள் மகன் என்று வழக்கு தொடர்ந்ததால் தான் ஆசை வைத்தவர்களெல்லாம் பிரிந்து செல்கின்றனரே என்று புலம்பிகொண்டே இருந்துள்ளார். இந்த மன உளைச்சலின் காரணமாகவே ஆட்டோ மீது மோதி டிரவருக்கு காயம் ஏற்படுத்தியதாக உங்கள் நியூஸ் புலன்விசாரணையில் தெரிய வந்துள்ளது. சட்டம், நீதி என்று சினிமாவில் பக்கம் பக்கமாக வசனம் பேசுபவர்கள், நிஜத்தில் இப்படித்தான் தங்கள் குற்றங்களை மூடி மறைக்கிறார்கள்” என்று முணுமுணுத்தபடி சொன்னார் கப்சா நிருபர்.

பகிர்

There are no comments yet