புதுக்கோட்டை: மீத்தேன் ஒரு ஹைட்ரோ கார்பன் என்று தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்றும் மீத்தேன் திட்டத்துக்குத்தான் நான் கையெழுத்திட்தற்கு என்னை மன்னியுங்கள் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களிடையே பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழர்களாக பிறந்திருப்பதற்கு நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். நெடுவாசல் மக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கவிட வலியுறுத்தி மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதினேன். ஆனால் அதை ஸ்டாம்ப் ஒட்டாமலேயே போஸ்ட் செய்ததால் திரும்பி வந்துவிட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டப் போராட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்ய விரும்பவில்லை, எங்களுக்கு தான் சட்டை கிழிப்பு, ஜெயலலிதா மரணம் போன்ற வலுவான திட்டங்கள் உள்ளன.

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த திட்டத்துக்கு கையெழுத்திட்டதே ஸ்டாலின்தான் என்று வைகோ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், நமது கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: தமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கான ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி கோரிய ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன். அது உண்மைதான். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ஒகே மட்டும் தான் சொன்னோம். அனால் பின்னர் தான் தெரிந்தது மீத்தேன் ஒரு ஹைட்ரோ கார்பன் என்று. எனது சிறிய மூளைக்கு இந்த இந்த விஷயம் தெரியாமல் போய் விட்டது என்று கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டார்.

பகிர்

There are no comments yet