சென்னை: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமி சேவ் சக்தி என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவுமாம். முன்னணி நடிகை பாவனா கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகி கேரள சட்டமன்றத்தில் பரபர விவாதம் நடந்தது. பின்னர் உண்மை நிலவரம் போலீசாரால் மூடி மறைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து நடிககை வரலட்சுமி தன்னிடம் முன்னணி டிவி சேனல் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் தவறாக நடந்து கொள்ள முயன்று, தரக் குறைவாக பேசியதாக தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சேவ் சக்தி என்ற பெண்கள் பாதுகாப்புக்கான இந்த இயக்கம் நடிகைகள் மட்டுமின்றி பாலியல் தொல்லைக்கு ஆளாகும் அனைத்து பெண்களுக்கும் உதவும் என்றார். எதிர்காலத்தில் அரசியலில் தாம் ஈடுபடலாம் என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து ராஜ ரத்னம் ஸ்டேடியத்தில் டைட் டி சர்ட் ட்ராக் சூட் சகிதம் இளமை குலுங்க நமது கப்சா நிருபரிடம் பேட்டி அளித்தார். “என் முந்(தா)நாள் அப்பா நாட்டாமை சரத்குமார் என் அம்மாவையும் என்னையும் பிரிந்து, அரசியல் ஆதாயத்துக்காக ராதிகாவை திருமணம் செய்து கொண்டது உலகறிந்தது. பின்னார் சினிமாவில் ஓஞ்ச வாழைப்பழமாகி விட்டதால் சின்னம்மாவிடம் தினசரி பேட்டா வாங்கிக் கொண்டு, ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் என்றார்.
பின்னர் ஓபிஎஸ் பேச்சைக் கேட்டு, கமல் கூறிய டுவிட்டர் கருத்துக்கு கண்டணம் தெரிவித்து பார்த்தார். அவர் (நாட்டாமை) தீர்ப்புக்கு அரசியலில் மதிப்பில்லாமல் போய்விட்டது, தவிர எனக்கும் என் அம்மாவுக்கும் ஜீவனாம்சம் தரவும் அவரிடம் பணமில்லை. என் லிவிங் டு கெதர் பார்ட்னர் விஷாலும் கைவிட்டு விட்டார், அரசியலில் இறங்கி விட்டார். எனவே சொட்டையான சொம்பாகிப்போன நாட்டாமையையும், போய்விட்ட பாய்பிரண்டு விஷாலையும் தலைமுழுகி விட்டு, நாட்டு ஆமைகளான மக்களை முட்டாளாக்கி திடீர் பால்கனி பாவை தீபாவைப் போல் அரசியல் பிரவேசம் செய்ய முடிவெடுத்தேன். நல்ல வேளையாக என்னை யாரும் பாலியல் பலாத்காரம் செய்யும் முன்பாக பாவனாவை காரில் ‘வச்சி’ செய்து விட்டனர், பாலியல் துன்புறுத்தல் பற்றி எனக்கு என்ன தெரியும், எனக்கு இன்னும் ஒருமுறை கூட திருமணம் ஆகவில்லை பாருங்க…” என்று கண் கலங்கினார்.
There are no comments yet
Or use one of these social networks