சென்னை: ஒரு பீரியடில் சென்னையை சேர்ந்த கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டதும், அதை மம்முட்டி மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் வெளியிட விடாமல் போராட்டம் செய்தது நினைவிருக்கலாம்.. மலையாள பட உலகில் 1990 மற்றும் 2000-ம் ஆண்டுகளில் ஷகிலாவின் ஏகபோக கவர்ச்சி ராஜ்ஜியம்தான். கேரளத்து முதல் நிலை நாயகர்களான மம்முட்டியும் மோகன்லாலுமே போட்டி போட அஞ்சிய நடிகை இந்த ஷகிலா.அவை கேரளா ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் பிரபலம். அதே சூழ்நிலை இப்போது தமிழ் படங்களால் கர்நாடகாவால் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கன்னடப் படங்களை விட பிற மொழிகளின் டப்பிங் படங்கள் நல்ல வசூலைப் பெற்று கல்லா கட்டி வருகின்றன. இதனால் கன்னட படங்களுக்கு போதிய வசூல் கிடைக்காத நிலையில், பிற மொழி படங்களை டப் செய்து வெளியிட அங்கு தடை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் அந்தத் தடை நீக்கப்பட்ட நிலையில், அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தை கன்னடத்தில் டப் செய்து அங்கு வெளியிட முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சத்யதேவ் ஐபிஎஸ் என்ற பெயரில் படத்தை டப் செய்து வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். கர்நாடகா முழுவதிலும் பல திரையரங்குகளில் படம் வெளியாகியிருந்த நிலையில், தலைநகரான பெங்களூருவில் படம் ரிலீசாகவில்லை. இதனிடையே, காவலன் படத்தில் நடித்த பிரபல நடிகர் விஜய் தனது பைரவா படம் சரியாக போகாததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அஜித் படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்கை கொளுத்துவேன் எனவும், இதற்காக ஜெயிலுக்கு போகவும் தயார் எனவும் கூறியதாக வதந்தி பரவியது.. என்னடா இது தமிழ் ரசிகனுக்கு வந்த சோதனை என்று இந்த செய்தியை முதலில் உண்மை என்று நம்பிய கப்ஸா நிருபர் பின்னர் பெங்களூரு சென்று நேரில் விசாரித்ததில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது காவிரி பிரச்சினையின் போது 100க்கும் மேற்பட்ட பஸ்களை எரித்தது போல அஜித் படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை எரிப்பேன் என்று சொன்னது ‘பைரவா’ விஜய் அல்ல, சினிமா சான்ஸ் இல்லாமல் பெங்களூரு ரோட்டுக்கடையில் ரவா உப்புமா சாப்பிட்டுக்கொண்டு இருந்த ஜக்கேஷ் என்ற உண்மையை கண்டறிந்துள்ளார். தொலைக்காட்சி பிரபலம், நடிகர், மற்றும் அரசியல்வாதியாகத் திகழும் ஜக்கேஷ் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான ‘காவலன்’ படத்தின் கன்னட ரீமேக்கில் ஹீரோவாக நடித்தவர் என்பதும், கன்னடத்தில் இப் படம் ‘பாடிகார்டு’ என்று பெயரில் வெளியானதாக கப்ஸா நிருபர் தெரிவித்தார்

பகிர்

There are no comments yet