சென்னை: அதிமுக நிர்வாகியாக இல்லாத டி.டி.வி. தினகரன் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதங்களை ஏற்க முடியாது என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மெழுகுவர்த்தி தயாரிப்பில் இருக்கும் சின்னம்மாவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. பெங்களூரு ஊடகங்கள் சின்னம்மாவை சொத்துக் குவிப்பு குற்றவாளி என்று செய்தி வெளியிடுகின்றன. தற்போது, “பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள” என்று முகவரியில் குறிப்பிட்டு சின்னம்மாவின் பெயரில் அஞ்சல் ஒன்றை தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. “தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகள்படி, தினகரன் அதிமுகவில் எந்தவொரு பொறுப்பையும் வகிக்காதவர். கட்சியின் எந்தவொரு தகவல் தொடர்பும் அதிகாரப்பூர்வ நிர்வாகியின் கையெழுத்திட்டு அனுப்பப்பட வேண்டும். எனவே, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பும் கடிதத்தில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். அல்லது உங்கள் சார்பில் நீங்கள் அதிகாரப்பூர்வமாக யாரையாவது அங்கீகரித்தவராக இருக்க வேண்டும். அதனால், மார்ச் 10-ம் தேதிக்குள் உங்கள் பதில்கள் வந்தடைய வேண்டும்,” என்று தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தினகரன் உள்பட சசிகலாவின் உறவினர்கள் பலரை கட்சியிலிருந்து விலக்கி வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு, கடந்த மாதம், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதாக அறிவித்த சசிகலா, தான் சிறை செல்லும் முன்பு அவரை துணைப் பொதுச் செயலராகவும் நியமித்தார். ஆனால், சசிகலா பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதே செல்லாது எனக்கூறி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதுதொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து எடுபிடியை பின்னுக்கு தள்ளி தான் முதல்வராகும் தனது பகல் கனவு கானல் நீராக போய்விடுமோ என்று சிறையில் சின்னம்மாவிடம் பச்சை குழந்தை போல் கதறி அழுததாக தெரிகிறது. இருந்தாலும் சோகத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அப்பல்லோ சிகிச்சையின் போது ஜெயலலிதாவை கைநாட்டு வைக்க செய்தது போல் சின்னம்மாவும் சிறையில் இருந்தே கைநாட்டு வைத்து தன் கடிதங்களுக்கு நம்பகத்தன்மை கொடுப்பேன் என்று தேர்தல் ஆணையத்துக்கு ஆணவத்துடன் மெயில் அனுப்பி உள்ளதாக கப்ஸா நிருபர் தெரிவிக்கிறார்.

பகிர்

There are no comments yet