சென்னை: நாள்தோறும் பிரேக்கிங் நியூஸ் என்று செய்தியாளர்களை வீட்டுக்கு வரவைத்து அரைத்த மாவையே அரைப்பதால், புரட்சி முதல்வர் ஓபிஎஸ் வீட்டில் மீடியாக்களின் வரவு குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனை முறியடிக்க இன்று நிஜமாகவே அம்மாவின் ஆன்மா குறித்து பரபரப்பு செய்தி தருகிறேன் என்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மறைந்த முதல்வரின் மரணம் தொடர்பாக எனக்கு அவர் இறப்பதற்கு முன்பே சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை போக்க வேண்டி நான் ஆக்டிங் முதல்வராக இருந்த போதே பல ஆக்சன் எடுத்துள்ளேன்.
அம்மா இறந்த பிறகு அவரது சமாதியின் உட்கார்ந்து தியானம் இருந்த எனக்கு அம்மாவின் ஆன்மா காட்சி தந்தது. இதற்க்கு பிறகு பல்வேறு அதிமுகவினரும் அம்மாவின் ஆன்மாவை அங்கு பார்த்துள்ளனர். இதனால் தனது சமாதிக்கு அம்மாவின் ஆன்மா அடிக்கடி வருவது உறுதியாகி உள்ளது.
அம்மாவின் சமாதிக்கு இப்போது சாதாரண போலீசாரே காவல் உள்ளனர். அம்மா உயிருடன் இருந்தபோது அவர்க்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், கருப்பு பூனை பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. எனவே அவரது ஆன்மாவுக்கும் அதே போல் பாதுகாப்பை இந்த சின்னம்மாவின் எடுபிடி அரசு அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மார்ச் 8-ம் தேதி உண்ணாவிரதம் இருக்கிறோம். அன்று மாலை 5 மணிக்குள் அரசு நல்ல முடிவு அறிவிக்காவிட்டால், அறப்போராட்டம் வெடிக்கும் என்று சின்னப்புத்தி சின்னம்மாவுக்கு எச்சரிக்கை விடுகிறேன் என்று நடுங்கிக்கொண்டே சொன்னார்.
There are no comments yet
Or use one of these social networks