சென்னை: ஜெயலலிதா இறந்து மூன்று மாதங்கள் கழித்து அவர் எவ்வாறு உடல் நலம் பாதிக்கப்பட்டார், பின்னர் இயற்கை எய்தினார் என்பது குறித்த எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது மரணத்தை வைத்து புரட்சி முதல்வர் பன்னீர் செல்வம் அரசியல் செய்வதை பிடிக்காத ஜெயலலிதாவின் ஆன்மா நேற்று எய்ம்ஸ் மருத்துவர்களின் உடலின் புகுந்து இந்த அறிக்கையை வெளியிட வைத்ததாக எமலோக வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்பல்லோ மருத்துவ அறிக்கை உடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அளித்த 5 அறிக்கைகளின் தொகுப்பு.

அக்.5: எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் முதல் முறை அப்பல்லோ வந்தனர். அக்.7 தேதி வரை சிகிச்சை அளித்த டாக்டர்கள் கில்னானி, அஞ்சன் ட்ரிகா மற்றும் நிதிஷ் நாயக் ஆவார்கள்.

வருகை ஒன்று:

ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், 20 ஆண்டுகளாக நீரிழிவு நோய், தைராய்டு சுரப்புக் குறை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்கள் இருந்துள்ளது. செப்.22 அன்று அப்பல்லோ மருத்துவக் குழு எய்ம்ஸ் மருத்துவக் குழுவிடம் ஜெயலலிதா நினைவிழந்த நிலையில், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக கூறியுள்ளது. காய்ச்சலும் இருந்துள்ளது. நோய் தோற்று காரணமாக ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகமாக இருந்தன.

காய்ச்சல், ரத்தத்தில் கட்டுபடுத்தாத சர்க்கரை அளவு, சிறுநீர் பாதையில் தொற்று, எக்சிமா என்ற தோல் வியாதி பாதிப்பும் இருந்துள்ளது. ஆக்சிஜன் உதவியுடன், வாய்வழி ஆண்டிபயாடிக்` மருந்துகளும் கொடுக்கப்பட்டன. பரிசோதனையில் இதய வால்வில் ரத்தக் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி மூச்சடைப்பும் இருந்துள்ளது. மருந்துகள் கொடுத்த பிறகு காய்ச்சல் குறைந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைப்படி செப்.28 அதிகப்படியான மூச்சுத் திணறல் இருந்ததாகவும் சிகிச்சை பலனளிக்காமலும் இருந்துள்ளது. இதய வால்வில் ரத்தக் கசிவும் தொடர்ந்துள்ளது. செப்.5 எய்ம்ஸ் டாக்டர் வருகையின் போது இதயம் வேலை செய்யாமல் ஏற்படும் நீர் கோர்ப்பும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. டாக்டர் நாயக் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து பின்னர் உடல் நிலையை கருத்தில் கொண்டு ட்ரக்கியஸ்டமி சிகிச்சை மட்டும் செய்ய பரிந்துரைத்தார். அக்.7 அன்று ட்ரக்கயஸ்டமி செய்யப்பட்டது. பிசியோதெரபி சிகிச்சை, நோய்த் தொற்று கட்டுக்குள் வைக்கப்பட வேண்டும் என்று கூறிய எய்ம்ஸ் குழுவின் முதல் வருகை முடிந்தது.

வருகை இரண்டு:

அக்.9 அன்று மீண்டும் அப்பல்லோ வந்தார் கிலானி. ஜெயலலிதாவின் எக்ஸ் ரே வை பார்த்த அவர் நுரையீரலில் நீர் கோர்ப்பு அதிகமாக இருந்ததால் சிகிச்சை தீவிரப்படுத்தப் பட்டது. சிறுநீர் பாதை தொற்று, இருந்தது. ஆனால் ரத்தத்தின் சர்க்கரை அளவு மருந்துகளால் கட்டுக்குள் இருந்தது. டாக்டர் கிலானி மீண்டும் அக்.10 அப்பல்லோ வந்துள்ளார். ஜெயலலிதா உடல் நிலை சற்று முன்னேற்றம் கண்டது.

வருகை மூன்று:

அக்.13 டாக்டர்கள் கிலானி மற்றும் ட்ரிகா சென்னையில் இருந்துள்ளனர். அக்.14 டாக்டர் நாயக் வந்து இணைந்து சிகிச்சை அளித்துள்ளார். சுவாச உபகரணங்களுடன் இருந்த ஜெயலலிதா உதட்டசைவுகளாலும், சைகையாலும் பேசியுள்ளார். சிடி ஸ்கேன் செய்யப்பட்டபோது, சின்னம்மா பிரதாப் ரெட்டியுடன் பேசியுள்ளார். பின்னர் டாக்டர் ரஸ்செல் சொற்படி சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

டாக்டர் டாக்டர் ரஸ்செல் உடன் காணொளிக் காட்சி மூலம் ஒரு மணி நேர ஆலோசனை நடந்தது. அக்.15 உடல் நலம் தேறிய ஜெயலலிதா நல்ல முன்னேற்றம் காண்பித்தார். அது தான் ராம மோகன் ராவ் அறிக்கை விட்ட நேரம். இன்னும் சில வாரங்களில் தேறி விடுவார் என்று அனைவரும் நம்பினர்.

வருகை நான்கு:

ஜெயலலிதா நன்கு குணமடைந்தது வந்த வேளையில், பிசியோ தெரபி யும் மற்ற சிகிச்சைகளும் தொடர்ந்தன. டிச.4 வந்ததும் 4.30 மணியளவி, ஜெயலலிதாவிற்கு நெஞ்சு வலி வந்துள்ளது. எக்மோ எனப்படும் உடல் பாகங்களை உறுப்புகளுக்கு பதில் செயல்படச்செய்யும் மருபி பொருத்தப்பட்டது. டயாலிசிஸ் மேற்கொள்ளப்பட்டது. இரவு 10 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவர்ள் குழு இரவும் பகலுமாக உழைத்துள்ளனர்.

எக்மோ சிகிச்சையால் உயர் ரத்த அழுத்தம், ஈசிஜி மிஷினில் ஒரே நேர் கொடாக பேஸ் மேக்கர் காட்சி அளித்தது. சிகிச்சை பலனளிக்கவில்லை. ஜெயலலிதாவின் உறவினர்களிடம் ஆலோசித்து அடுத்த கட்ட சிகிச்சை என் முடிவெடுக்கப்பட்டது. டிச.6 தேதி அறிக்கையின் படி அதற்கு முந்தைய நாள் டிச.5 முதல் மருத்துவ உபகரணங்கள் அவர் உடம்பில் இருந்து நீக்கப்பட்டன். ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.

மற்ற ஆதாரங்கள்Credit: The News Minute
பகிர்

There are no comments yet