சென்னை: ஜெயலலிதா மறைந்து மூன்று மாதங்களுக்குப் பின்னரும், அவர் முதல் முறையாக மருத்துவ சிகிச்சை பெற்று ஐந்து மாதங்களுக்கு பின்னரும், தமிழக அரசு அவரது மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் குறிப்புகளை தொகுத்து அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. செப் 22 அன்று இரவு 10 மணி அளவில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தள்ளி விடப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும், ஏற்கனவே சர்க்கரைவியாதி, உயர் ரத்தஅழுத்தம், மற்றும் சுவாச பிரச்சினைகளால் அவதிப்பட்டுள்ளார். தொடர்ந்து கொடுக்கப்பட்ட தவறான மருந்துகளால் ஜெயலலிதா உயிரிழந்ததாக கூறப்பட்டதை அறிக்கை மறுக்கிறது. மாறாக சர்க்கரைவியாதி, உயர் ரத்தஅழுத்தம் ஆகியவற்றை கட்டுபடுத்தவே மருந்து எடுத்துக் கொண்டுள்ளார். அறிக்கையில் ஜெயலலிதாவிற்கு சிறு வயது முதலே எக்சிமா எனப்படும் தோல் நோய் இருந்ததாகவும், அதன் காரணமாக தோல் செதில் உறிவது அரிப்பும் இருந்துள்ளதாக் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு அப்பல்லோவில் 18 மருத்துவர்களும், எய்ம்சில் 7 மருத்துவர்களும் மற்றும் பல தலைசிறந்த மருத்துவமனைகளின் 12 சிறப்பு மருத்துவர்களும் சிகிச்சை அளித்தனர். இதில் டாக்டர் கே.எம்.செரியன், ரிச்சர்ட் பீலே இருவரும் அடக்கம். இது அல்லாமல் டாடா மெமோரியல் மருத்துவமனை, சிஎம்சி வேலூர், ஹிந்துஜா மருத்துவமனை மும்பை, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் அமெரிக்கா மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஹைதரபாத் மற்றும் பெங்களூரு ஆகியவற்றில் பணியாற்றும் டாக்டர்களும் இந்த மருத்துவக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தன.

தேதி வாரியான ஜெயாவின் சிகிச்சை விபரம்:

முதல் நாள்:

செப். 22 2016 அப்பல்லோ ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டது. ஜெயலலிதா பேச்சு மூச்சில்லாமல் இருந்துள்ளார். ரத்த அழுத்தம் 140/70. இருந்துள்ளது. 10.25 மணிக்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார். அப்போது ரத்த அழுத்தம் 140/100. இதயம் சரியாக வேலை செய்யாததால் உண்டாகும் நுரையீரலில் நீர் கோர்ப்பும் இருந்துள்ளது. அவசர சிகிச்சைக்குப் பிறகு அபாயகரமான கட்டத்தில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஈ.சி.ஜி. நார்மலாக இல்லை எனவும், மாரடைப்பு வரும் முன் அளிக்கப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்காலிக பேஸ் மேக்கர் கருவியும் பொருத்தப்பட்டது. அப்பல்லோ அறிக்கை பின்னர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து விளக்கமாக கூறுகிறது.

திடீரென ரத்த அழுத்தம் மிக குறைந்ததால் அதற்கான மருந்துகள் தரப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவருடைய இதய துடிப்பும் சீராக இல்லாததால் (ப்ரடிகார்டியா) அதற்கும் மருந்து தரப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு ஏற்கனவே உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், தைராய்டு சுரப்புக் குறை, நாள்பட்ட வயிற்றுப்போக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நோய்கள் இருந்துள்ளது.

ஜெயலலிதா உடல் நலம் குன்ற காரணம்

அப்பல்லோ சிகிச்சைக்கு வரும் முன் 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் இருந்துள்ளது. சிறுநீரக பாதைத் தொற்றுக்கான பாக்டீரிய அதிகமாக காணப்பட்டுள்ளது. மூன்றாவது நாள் முதல் ஜெயலலிதா சுவாச சிகிச்சை கருவி உதவியின்றி உடல் நிலை தேறி வந்துள்ளார். நான்காவது நாள் முதல், அதகப்படியான மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.

செப் 28 அன்று சுவாசம் மிகவும் மோசமடைந்ததால் உறவினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஒப்புதலோடு சுவாச சிகிச்சை கருவி பொறுத்தப்பட்டது. டாக்டர்கள் கிரினாத், செரியன் மற்றும் ஸ்ரீதர் ஆகியோரின் ஆலோசனைப்படி இந்த நிலையில், அறுவைசிகிச்சை தேவைப்படவில்லை என கூறப்பட்டது. தீவிர சிகிச்சைகள் பலனளிக்காமல், செப்.30 அன்று ஜெயலலிதாவிற்கு நேரடி ஆக்சிஜன் சிகிச்சை வழங்கப்பட்டது.

டாக்டர் ரிச்சர்டு பீலே வந்தார் 

பின்னர் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே வரவழைக்கப்பட்டார். ஜெயலலிதா 40% இறக்க வாய்ப்புள்ளது கூறினார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றமும் பின்னடைவும், மாறி மாறி இருந்துவந்துள்ளது. ஆனாலும் சிறிது முன்னேற்றம் காணப்பட்டது.

பின்னர் உயர் ரத்த அழுத்தமும், நுரையீரல் நீர்கோர்ப்பும் அதிகமானதால் மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளார். அப்போது ட்ரக்கியஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அக்.9 அன்று சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழக்கத் துவங்கின. அக்.10 அன்று மீண்டும் நினைவு திரும்பி, ஜெயலலிதா விழிப்புடனும், சுயநினைவுடனும் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்களுடன் பேசியுள்ளார்.

பின்னர் உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, லண்டனில் இருந்து இதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஸ்டூவர்ட் ரசல் மற்றும் ஜெயன் பரமேஷ்வர் இருவரும் சிகிச்சை அளித்தனர். அவர் இதயத்தின் கீழ் பகுதி இயங்கவில்லை என கண்டறிந்தனர். ஜெயலலிதாவுக்கு கேபில்லரி லீக் (capillary leak) என்று சிறிய ரத்த நாள கசிவு என்ற அறிய வகை நோய் இருப்பதாகவும் தெரிந்தது.

ஒரு மாதத்துக்கு பிறகு:

நவம்பர் முதல்வாரத்தில் உணவு செலுத்திய குழாய் அகற்றப்பட்டது. வாய்வழி உணவு வழங்கப்பட்டது. பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. நவ.19 நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாகவும், ஐசியுவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டதாவும் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து வந்த ரத்த அழுத்த நிபுணர் சிகிச்சையை தொடர்ந்துள்ளார்.

கடைசி 48 மணிநேரம்:

டிச. 3 டாக்டர் கில்நாணி தலைமையில் எய்ம்ஸ் மருத்துவக்குழு அவரது உடல்நிலையை ஆய்வு செய்தது, உறவினர்களுடன் விவாதித்தது. உடல் நிலை மோசமடைய தொடங்கியது. அதிக இருமலும், ஆக்சிஜன் தேவையும் அதிகமானது. நிமோனியா ஏற்பட்டதால் மீண்டும் சுவாச உதவி கருவி பொருத்தபட்டது.

டிச.4 மீண்டும் ட்ரக்கியாஸ்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. காலை ஆகாரத்திற்கு பின்னர் வாந்தியும் ஏறபட்டுள்ளது.

மாலை 4.20 மணி அளவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த போது மூச்சு விட முடியவில்லை என ஜெயலலிதா கூறியுள்ளார். பின்னர் எக்மோ கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. டிச.5 எய்ம்ஸ் மருத்துவர்கள் வருகைக்கு பின்னர் காய்ச்சல் குறைந்தது. அனால் அதன் பின்னர் மூளை செயல் இழந்து விட்டது, இருதய சுதியும் (heart rhythm) நின்ற நிலைக்கு சென்ற ஜெயலலிதாவிற்கு எக்மோ சிகிச்சை தொடர்வதில் அர்த்தமில்லை என் மருத்துவ குழு சொன்னதால் முதன்மை செயலர், சுகாதார செயலர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சின்னம்மா, தம்பிதுரை, சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 11.30 மணி அளவில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதாவின்  பூத உடல், பிப்ரவரி 7-ம் தேதி புரட்சி முதல்வர் தனது சமாதியில் வந்து உட்கார்ந்ததும்,  தனது ஆன்மாவை அனுப்பி அவருக்கு மூளை சலவை செய்து சின்னம்மாவை எதிர்க்க சொன்னதாக தெரிகிறது.

There are no comments yet