சென்னை: ஹைட்ரோகார்பன் திட்டத்தால் நிலத்தடி நீர் மற்றும் விவசாயத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்று ஒ.என்.ஜி.சி இயக்குனர் பி. ராஜா செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். மேலும் 600 மீ கீழே மட்டுமே நிலத்தடி நீர் உள்ளதாகவும் ஹைட்ரோகார்பன் திட்டத்தில் கேஸ் ஆயில் எடுப்பதற்க்கு நிலத்தடியில் 2000 மீட்டர் கீழே மட்டுமே தோண்டப்படும் என்றும் விளக்கமளித்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு 100 சதுர மீட்டர் மட்டுமே இடம் தேவைப்படும், இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படாது என்றும் 3 லிருந்து 4 மாதங்கள் மட்டுமே இத்திட்டம் செயல் படுத்தப்படும் எனவும் கூறினார். மேலும் விருப்பமுள்ள விவசாயிகளிடம் மட்டுமே நிலம் பெறப்படுள்ளதாகவும் திட்டம் முடிந்த பின்னர் அந்த இடம் விவசாய நிலமாக மாற்றி விவசாயிக்கே திரும்ப அளிக்கபடும் என்றும் கூறினார். இத்திட்டதின் மூலம் வெளியேறும் கழிவுப்பொருட்கள் பாதுக்காப்பான பாலிதீன் குழியில் மட்டுமே சேகரிக்கப்படும் என்றும் இதிலிருந்து எந்த கழிவும் வெளியேராது எனவும் இதனால் நிலத்தடி நீர் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றும் கூறினார். ஷேல் திட்டம் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் ஹைட்ரோகார்பன் திட்டம் பாதுகாப்பானது எனவும் தெரிவித்தார்.

இது குறித்து நெடுவாசல் வரை சென்று மக்களோடு மக்களாக அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார் ஸ்டாலின். சட்டசபை போல் சட்டையை கிழித்துக் கொள்ளாமல், திரும்பிய ஸ்டாலின் கப்ஸா நிருபரிடம் பேசினார். “திமுக அரசு ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கு மட்டுமே அனுமதி கொடுத்தோம், திட்டம் முடிந்த பின்னர் விவசாய நிலம் விவசாயிக்கே திருப்பி கொடுக்கப்படும் என ஒ.என்.ஜி.சி. பொய்யாக வாக்குறுதி அளித்திருப்பது போல், ஆய்வு முடிந்ததும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மூடுவிழா நடத்தவிருந்த திமுக விற்கு வாய்ப்பளிக்காமல், மக்கள் அதிமுக அரசை வெற்றி பெற செய்தது மக்களின் குற்றமே. ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு மட்டும்தான் தி.மு.க ஆட்சியில் அனுமதியளிக்கப்பட்டது. என்று கனிமோழி பேசியுள்ளார். ஆய்வு முடிந்தவுடன் திட்டத்தை ரத்து செய்யும் முடிவில் நாங்கள் இருந்தோம் ஆனால் இந்த மக்கள் மீண்டும் ஆட்சியை அவர்களிடம் ஒப்படைக்காததால் இன்று அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த கலைஞர் இப்போது கைகளில் கொப்புளம் வந்து படுத்த படுக்கையாக உள்ளார், மக்களும் அதே போல் திமுக என்ற பேரியக்கத்துக்கே ஓய்வு கொடுத்து விட்டனர். ஆக தவறு மக்கள் மீதுதான். இனி போராட்டம் மக்களுக்கெதிராக நடத்தப்படுவதுதான் நியாயம். விரைவில் வாடகைக்கு லாரிகள் பிடித்து வடமாநிலங்களில் இருந்து ‘ஹிந்தி’ பேசும் வாலிப உடன்பிறப்புக்களை மெரினாவில் குவித்து, மக்களுக்கு எதிரான போராட்டம் நடத்த ரகசிய திட்டம் வைத்துள்ளோம் என்று கிசு கிசுப்பது போல் உரத்த குரலில் பேசினார். இதைக் கேள்விப்பட்ட எடப்பாடி அரசு விக்கிரமாதித்தன் வேதாளம் கதையாக மீண்டும் ஆயிரக்கணக்கான போலீஸ் படையை மெரினாவில் குவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பகிர்

There are no comments yet