சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே தமிழர்களை “பொறுக்கி” என கூறி உலகத்தமிழர்களின் எதிர்ப்பை பெற்றார் சுப்பிரமணியன் சுவாமி. இந்நிலையில் தமிழக முதல்வராக சசிகலா வரக்கூடாது என பெரும்பாலான மக்கள் கருத்து கூறி வரும் வேளையில் சசிகலாவுக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார். சசிகலாவை பெங்களூரு சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இதனால்தான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. தற்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அண்மைக் காலமாக சசிகலாவை ஆதரித்து சுப்பிரமணியன் சுவாமி பேசி வருகிறார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் கப்ஸா நிருபரிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, “தமிழகத்தில் முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சுமாராக நடைபெற்று வருகிறது. ஹைட்ரோகார்பன் திட்டம் பற்றி “எனக்கு அவ்வளவாக தெரியவில்லை” என்று மோடி சொல்லச் சொல்லி அனுப்பினார். மத்திய அரசில் விசாரித்த போது திமுக அரசுதான் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியது என கூறினர். பிள்ளையயும் கிள்ளிவிட்டு தொட்ட்லையும் ஆட்டி விட்ட மாதிரி ஸ்டாலின் நெடுவாசல் சென்று சட்டையை கிழிக்காமல் நடித்து காட்டினார். நான் வழக்கு தொடர்ந்ததால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தற்போது சட்ட ரீதியாக தண்டனை கிடைத்துவிட்டது. “அது போன மாசம்..” இனி அவர் பெங்களூரு சிறையில் இருக்க வேண்டியதில்லை. “இது இந்த மாசம்.” சின்னம்மாவை தமிழக சிறைக்கு மாற்றுவதன் மூலம் பெங்களூரு ஊடகங்களில் கூறப்பட்ட ‘சொத்து குவிப்பு குற்றவாளி’ என்ற அவப்பெயரை துடைத்தெறிந்து, அம்மா போல தங்கத்தாரகை இட்லி சாப்பிட்டார், திராவிடத்தாய் உப்புமா சாப்பிட்டார் என புகழ் பெறச் செய்யலாம். முதல்வர் நாற்காலியில் அமர்ந்த்திருக்கும் இடைப்பாடியை பார்த்தால், ஏதோ “உயர்தர சைவ உணவகத்தில் கல்லாவில் அமர்ந்திருக்கும் ஓட்டல் முதலாளி மாதிரி இருக்கிறது. தமிழக சிறைக்கு சின்னம்மாவை மாற்றுவதன் மூலம் எடுபிடிக்கு நேரடி குடைச்சல் கொடுத்து, விரைவில் சின்னம்மாவை தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கச் செய்ய வேண்டும். சிறை பராமரிப்புக்கு ஆண்டுதோறும் கர்நாடாக அரசுக்கு நாம் பணம் ஏன் கொடுக்க வேண்டும். அதற்காகவே சின்னம்மாவை தமிழக சிறைக்கு மாற்றிவிடலாம். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.

பகிர்

There are no comments yet