சென்னை: திங்கட்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் தங்கச்சிமடத்தைச் சார்ந்த தாசன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் படகில் பிரிட்ஜோ, ஜெரோன், அந்தோனி, கிளிண்டஸ், சாம் பிரிட்ஜோ, ரிமோட்சன் ஆகிய 6 மீனவர்கள் இரவு 10 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகை நோக்கிச் சுட்டதில் பிரிட்ஜோ (21) என்ற மீனவர் குண்டடி பட்டு உயிரிழந்தார். படகின் டிரைவர் ஜெரோன் காயங்களுடன் ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக நமது கப்ஸா நிருபரிடம் முன்னாள் புரட்சி முதலவர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது: ”தமிழக மீனவர்களுக்கு எப்பொழுதும் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம், சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம், கடிதம் மேல் கடிதம் எழுதி ஸ்டாம்ப் விலையை உயரத்தியவர் ஜெயலலிதா . என் அம்மா ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு இலங்கை கடற்படையின் அராஜகம் அதிகமாகிவிட்டது.  இந்த அராஜகத்தின் உச்சமாக நேற்று ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் கையெறி குண்டுகளை வீசி தாக்கியிருக்கிறார்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையின் இந்த வெறி ஆட்டத்தை முறியடிக்க, அம்மாவின் மரணத்தை ஆராய்ந்தால் போதுமானது. இந்த விசாரணை மூலம் மீனவர் பிரச்சினையில் இருந்து மாணவர் பிரச்சினை வரை தீர்வு காணலாம். மத்திய அரசும், மாநில அரசும் இதை அலட்சியமாக எண்ணாமல் தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் அம்மாவின் ஆன்மாவை இரக்கமே இல்லாத இலங்கை கடற்படை மேல் ஏவி விட்டு அவர்களின் அட்டகாசத்தை முறியடிப்போம் என்று ஆவேசமாக கூறினார்.

There are no comments yet