சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பட்டப் அரிவாளால் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் சிறைக்குள் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வழக்கை மார்ச் 7 2017 எழும்பூர் நீதிமன்றம் முடித்து வைத்தது. சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் சுவாதி (24). அவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வழக்கமாக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அவரது பணியிடத்துக்கு செல்வார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சுவாதியை அவரது தந்தை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு சென்றார். பின்னர் அவர் சென்ற சிறிது நேரத்திலேயே சுவாதியை இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார். இது தமிழகத்தையே உலுக்கியதோடல்லாமல் அந்த சுவாதி கொல்லப்பட்டதை பார்த்த அனைவரின் நெஞ்சமும் பதைபதைத்தது.

இந்நிலையில் தகவலறிந்து சம்பவம் இடம் விரைந்த சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உயர் நீதிமன்றம் தலையிட்டு போலீசை நெருக்கியதால் காவல் துறை அவசர கதியில் செய்த விசாரணையில் சுவாதியை கொன்ற குற்றவாளி குறித்து துப்புக் கிடைத்தது. இதைதொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை போலீஸார் சுற்றி வளைத்தனர். பின்னர் கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக கதை கட்டி அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி சிறையில் இருந்த மின்கம்பியை பல்லால் கடித்து போலீசாரால் ‘தற்கொலை’ செய்யப்பட்டு ராம்குமார் இறந்தார். இந்நிலையில் சுவாதியின் கொலை வழக்கானது எழும்பூர் நீதி்மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்குமார் மரணம் தொடர்பான ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததை அடுத்து, குற்றவாளி என போலீசாரால் மட்டுமே கருதப்பட்ட ராம்குமார் தற்போது உயிருடன் இல்லாததால் இந்த வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இவ்வழக்கின் ஒரே குற்றவாளி ராம்குமார்தான் என போலீசார் கூறியதை வேறு வழியின்றி நீதிமன்றம் ஏற்று வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து பெங்களூரு சிறையில் உள்ள சின்னம்மாவை சந்திக்க புறப்பட்டுக் கொண்டிருந்த எடுபிடி பழனிச்சாமியை மடக்கி கப்ஸா நிருபர் எடுத்த பேட்டி: “மார்ச் 8 அன்று ‘மகளிர் தினம்’ கடைபிடிக்கப்படுவதால், சுவாதி வழக்கை அவசர வழக்காக எடுத்து நல்ல முறையில் பலத்த சந்தேகங்களுடன் முடித்து வைக்க சின்னம்மாதான் ஆலோசனை சொன்னார். தங்கத்தாரகை புரட்சி தலைவியுடன் சின்னம்மா முதன் முறையாக சிறை சென்ற போது, தருமபுரியில் அதிமுக கூன்பாண்டியன்கள் கருமமே கண்ணாக மூன்று அப்பாவி கல்லூரி மாணவிகளை தீக்கிரையாக்கி “காவு” வாங்கியதால், அம்மா குற்றமற்றவர் என நிரூபித்து வெளியே வந்தார்கள். அதே போன்ற ஒரு பரிகாரத்தை சின்னம்மா முதல்வராகி சிறை சென்றிருந்தால் செய்திருப்போம். அதற்கு வழியில்லாமல் போய் விட்டது. தற்போது ஆளும் அரசு செயல்படுத்த நினைக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவும் திராவிடத்தாய் சின்னம்மாவின் நிழல் ஆட்சியில் பெண்ணின் பெருமையை உலகுக்கு எடுத்துரைக்கவும் சுவாதி வழக்கை முடித்து வைத்தோம்.

இதன் மூலம் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பற்ற தன்மையை நிலைநிறுத்தவும், முக்கியமான அரசு நிகழ்வுகளின் போது மக்கள் கவனத்தை திசை திருப்ப, நந்தினி, ஹாசினி போன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பூதாகாரப்படுத்தி அரசியல் செய்யவும், சின்னம்மா பால பாடம் எடுப்பதாக் கூறியிருக்கிறார். ஸ்வாதி வழக்கை முடித்தது போல் அம்மாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தையும் மறைத்து ஒருநாள் அதையும் இதைபோல் முடித்து வைப்போம். அதற்கான ஆலோசனை கேட்க பெங்களூரு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்,” என்று சுவாதி கொலையுண்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிரெயினை பிடிக்க விரைந்தார்.

பகிர்

There are no comments yet