சென்னை: கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிரமான நீரிழிவு (டயபெடிஸ்) நோயால் அவதிப்பட்ட ஜெயலலிதா, அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட போது அவரது சர்க்கரை அளவு 560 mg / dL (சாதாரண அளவு: 80). மேலும் அவருக்கு ஹைபோதைராய்டிஸம், மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகவும் தெரிகிறது. குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி (சசிகலா? ), பெண்களுக்கு சகஜமாக வரும் சிறுநீர் பாதை நோய் தொற்று (Bladder Infection) மற்றும் காய்ச்சலால் ஒரு வாரம் அவதிப்பட்டு வந்தார். இவை தவிர, தோலழற்சி அரிப்பு என அழைக்கப்படும் டெர்மடிடிஸ், தோல் வியாதிக்கு தோல் வியாதி நிபுணர் டாக்டர் கே.எஸ் சிவகுமார், (இவர் சசிகலா உறவினர்) பரிந்துரையின் பேரில் ஸ்டெராய்டுகள் மாத்திரைகள் எடுத்துள்ளார். என்று அப்பல்லோ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பல்லோ ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை அடைந்தபோது ஜெயலலிதா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார், அவரது விட்டல் சைன்ஸ் எனப்படும் நாடித்துடிப்பு (88 / minute) மற்றும் இரத்த அழுத்தம் (140/70) சற்றே அதிகமாக இருந்தது. மருத்துவமனையின் வழக்கமான அனைத்து சோதனைகளும் நடத்தப்பட்ட போது அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகம் செயல்பாடுகள் முதலியன அனைத்தும் நார்மலாக இருந்ததாக அப்பல்லோ தெரிவிக்கிறது. அனால் இதற்கிடையில், ஜெயா செப்டிக் ஷாக் எனப்படும் நோய் தொற்றால் உடலுறுப்பு செயலற்ற அதிர்ச்சி நிலைக்கு சென்றதாக அப்பல்லோ தெரிவிக்கிறது.
மேலும் டிஸ்சார்ஜ் ஷீட்டில் அவருடைய பழைய மருந்துகள் மாற்றம் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது, அப்படியானால் அவருக்கு பழைய மருந்துகளை விட மிகவும் சக்தி வாய்ந்த பயனுள்ள மருந்துகளை அப்பல்லோ கொடுத்ததா என்ற கேள்வி எழுகிறது. .
இப்போது அப்பல்லோவுக்கும், சின்னம்மாவுக்கும் நமது கேள்விகள்:
1. நீரிழிவு என்பது மிகவும் சாதாரணமான,எளிதில் கட்டுக்குள் கொடுவரக்கூடிய நோய், ஆனால் அப்பல்லோவில் அனுமதிக்கும் போது அவரது சர்க்கரை அளவு 560. இது மிகவும் வியப்புக்குரியது. அப்படியானால் ஜெயலலிதா நீரிழிவுக்கு சரியான மருந்துகளை எடுக்க வில்லையா அல்லது அவருக்கு தெரிந்தோ (தெரியாமலோ) தவறாம மருந்துகள் கொடுக்கப்பட்டதா. இது குறித்து முன்பே உங்கள் நியூஸ் கேள்வி எழுப்பியிருந்தது (இங்கே காணவும்).
உலகின் நவீன் மருத்துவ வசதிகளை அடையக்கூடிய ஒரு மாநில முதல்வருக்கு என்னென்ன மருந்துகளை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை கூற மருத்துவர்கள் தவறிவிட்டனரா? அவரது சர்க்கரை அளவு 560 அளவுக்கு போனதற்கு என்ன காரணம். சிறுநீரக நோய் தோற்று காரணமாக சர்க்கரை அளவு அதிகமாக இருக்கலாம் சில மருத்துவர்கள் யூகிக்கின்றனர். அது இந்த கேள்விக்கு பதில் வீட்டில் ஜெயலலிதாவை கவனித்து வந்தவர்கள் பதில் என்ன?.
2. ஜெயலலிதாவுக்கு தைராய்டு சுரப்பு குறை இருந்துள்ளது. ஆனால் தைராய்டு சுரப்பிக் குறை நிவர்த்தி செய்ய அவரது எடுக்கப்பட்ட மருந்தை எந்த பற்றிய எந்த குறிப்பும் இல்லை. கவனிக்கப்படாத தைராய்டு சுரப்பு இருந்தால் ஒருவர் கோமா நிலைக்குக் கூட போகலாம், சில சமயங்களில் இது இதய நோய்களையும் ஏற்படுத்தலாம்.
3. ஜெயலலிதாவுக்கு ஏன் பீட்டா பிளக்கர் (beta blockers) கொடுக்கப்பட்டது? பீட்டா பிளாக்கர் மருந்து சர்க்கரை நோயாளிகளுக்கு கொடுத்தால் அது அவர்களின் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மற்ற பாதுகாப்பான மருந்துகள் இருக்கும் போது பீட்டா பிளாக்கர் கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?
4. சிறுநீரக நோய் தோற்று என்பது பெண்களின் சாதாரண விஷயம். ஆண்டிபயாடிக் கொடுத்தால் ஓரிரு நாட்களில் சரியாகி விடும். அப்பல்லோவும் மருந்து கொடுத்த பின்னர், அவரது சிறுநீரில் பாக்டீரியா இல்லை என்று கூறியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, அவருக்கு செப்சிஸ் வரும் அளவுக்கு நோய் தோற்று உண்டாக காரணம் என்ன?
5. தோல் அரிப்பு நோய்க்கு ஜெயலலிதா வாய்வழியாக ஸ்டெராய்டுகள் மருந்துகள் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது. சாதாரணமாக தீவிரமான நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு ஸ்டெராய்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் வாய்வழி ஸ்டெராய்டுகள் சர்க்கரை அளவை அதிகரிக்கும், உடம்பில் நீர்த்தேக்கம் வரும், இதயத்திற்கும் கெடுதலானது. தோல் அரிப்பு வியாதிகளுக்கு பல பயனுள்ள ஸ்டீராய்டு கிரீம்கள் இருக்கும் போது ஏன் வாய்வழி ஸ்டெராய்டுகள் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டது?
6. ஜெயலலிதா அப்பல்லோவுக்கு வந்த அன்றே அவருக்கு செப்டிக் அதிர்ச்சி இருந்ததாக அப்பல்லோ தெரிவிக்கிறது. சாதாரண சிறுநீரக தொற்று மூலம் செப்சிஸ் உண்டாவது மிகவும் அரிது. அதோடு வந்த இரண்டு நாளிலேயே சிறுநீரக தொற்று குணமாகி விட்டதாக தெரிகிறது. சாதாரணமாக செப்சிஸ், மருத்துவமனையில் இருந்து வரும் தொற்று மூலமாக வரலாம். இதை நோசோகமியல் (nosocomial) என்பார்கள். இந்த தோற்று நோய் சாதாரணமாக ஆண்டிபயாடிக் மருந்துகளால் குணப்படுத்துவது கடினம். அப்படியென்றால் அப்பல்லோவில் சேர்ந்த பிறகு ஜெயலலிதாவுக்கு இந்த தொற்று உண்டானதா அல்லது அவருக்கு போயஸ் கார்டனில் அளித்த சிகிச்சையில் உண்டானதா என்பதை அப்பல்லோ விளக்க வேண்டும்.
7. ஜெயலலிதாவுக்கு நிமோனியா இருப்பது டிசம்பர், 3-ம் தேதி கண்டறியப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனைக்கு வெறும் சிறுநீர் தொற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்ரே மற்றும் சோதனைகளில் இல்லாத நிமோனியா, டிசம்பர், 3-ம் தேதி எப்படி வந்தது. அப்படியென்றால் மருத்துவர்கள் சரியாக டயக்னோஸ் செய்யவில்லையா அல்லது அலட்சியமா?
8. 50 வயதுக்கு மேல் குறிப்பாக பெண்கள் – – நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா ஆபத்து இருப்பவர்களுக்கு நிமோனியா தடுப்பூசி போடவேண்டும் என்பது நடைமுறை. உலக சுகாதார நிறுவனமும் (WHO) இதை பரிந்துரைக்கிறது. இந்த நிமோனியா தடுப்பூசி ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்டதா?
9. டயபடிக் கோமா என்பது, உடம்பில் மிக அதிக அளவு சர்க்கரை இருந்தால் வருவது. அப்போது keto-acidosis என்ற நிலை ஏற்பட்டு மயக்க நிலை ஏற்படும். ஜெயலலிதா அப்பல்லவில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு இந்த நிலை இருந்ததா என்பதை கண்டறிய kotone டெஸ்ட் செய்யப்பட்டதா என்பதை அப்பல்லோ விளக்க வேண்டும்.
10. Brain Stem Dysfunction எனப்படும் மூளை தண்டு பிறழ்ச்சியால் ஜெயலலிதா மூளை சாவு அடைந்து விட்டதாகவும், தன பின்னரே எக்மோ மெஷினை நிறுத்துவதாகா முடிவு எடுக்கப்பட்டதாகவும் அப்பல்லோ தெரிவிக்கிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய ஆகியவை இதற்கான காரணிகள். Brain Stem Dysfunction ஆகும்போது, ஸ்ட்ரோக் போல் மூலையில் இரத்த உறைவு அல்லது இரத்தக்கசிவு ஏற்படலாம். அப்படி ஆகும்போது MRI டெஸ்ட் செய்யப்டுவது வழக்கம். ஆனால் எம்ஆர்ஐ செய்ததாக எந்த குறிப்பும் இல்லை.
11. இது மிகவும் முக்கியமான கேள்வி – அப்பல்லோ அறிக்கையில் குடும்ப உறுப்பினர் என்று குறிப்பிடப்படும் சின்னம்மா சசிகலா, ஜெயலலிதா நெருங்கிய நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் உள்ளவரே தவிர ஜெயலலிதாவுக்கு இரத்த உறவு இல்லை. இந்த நிலையில், அரசு அதிகாரிகளுடன் சேர்ந்து ஜெயலலிதாவின் உயிரை எடுக்கும் (எக்மோ மெஷினை நிறுத்துவத்தின் மூலம்) உரிமையை சசிகலாவுக்கு யார் தந்தது?
இந்த கேள்விகளுக்கான பதில்கள் அப்பல்லோ தரும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இவற்றை கேட்பது நமது கடமை. இது மட்டுமல்லாமல், ஜெயலலிதா அப்பல்லோவில் உப்புமா சாப்பிட்டார், ஸ்வீட் சாப்பிட்டார், ரெஸ்ட் எடுக்கிறார் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் மூலம் மாநில அரசாங்கம் வெளியிட்டிருந்த அப்பட்டமாக பொய் மற்றும் தவறான அறிக்கைகளையும், பேட்டிகளையும் நினைத்தால் அவற்றில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக இப்போது நினைக்க தோன்றுகிறது.
சற்றே அதிக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூச்சுத்திணறல் மற்றும் மயக்கத்தில் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்களுக்கு பிறகு இறந்து விட்டார் என்பதை மனம் நம்ப மறுக்கிறது,
There are no comments yet
Or use one of these social networks