சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு கடற்பகுதிக்கு அருகே திங்கள்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் கழுத்தில் தோட்டா பாய்ந்து மீனவர் பிரிட்ஜோ (21) அதே இடத்தில் உயிரிழந்தார். செரோன் (22) என்ற மற்றொரு மீனவர் காலில் காயமடைந்தார். இலங்கை கடற்படைக் காடையர்களால் தங்கச்சி மடம் பகுதியைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்பட்ட கொடும் செயலைக் கண்டு மக்கள் கொதித்துள்ளனர். கைது செய்து கொண்டிருந்த இலங்கை கடற்படை இப்போது துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு துணிந்துள்ளதை பல்வேறு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்டித்து ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் போராட்டங்களை நடத்தினர். மீனவர் படுகொலையை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரட்ஜோவின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து நாகர்கோவிலில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கப்ஸா நிருபருக்கு அளித்த பேட்டி: “தமிழகத்தை, மத்திய அரசு எவ்வாறு வஞ்சிக்கிறது என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சம்.. மீனவர் பிரச்னையில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு செயல்பட்டு வந்தது, வருகிறது, இன்னும் வரும். அதாவது முடிவுக்கே வராது என்பதை தான் அப்படிச் சொன்னேன். பின்னர் எவ்வாறு அரசியல் செய்து கல்லா கட்டுவது? அரசியல்ல இதெல்லாம் சர்வ சாதாரணம். பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் நெடுவாசல் பிரச்சினையை திசை திருப்ப ஒரு விஷயம் தேவைப்பட்டது. அதனால் மத்திய பாஜக அரசின் முன் அனுமதியுடன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. மீன்பிடிப்பது இரு நாட்டு தமிழ் மீனவர் பிரச்னை. தமிழக மீனவர்கள், இலங்கை பகுதியில் மீன்பிடிப்பதை அந்நாட்டு மீனவர்கள் எதிர்க்கின்றனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இலங்கை அரசு, முன்பே மத்திய அரசிடம் அனுமதி வாங்கி விட்டது. அதாவது போன பஞ்சாயத்து கூடிய போதே இந்த முறை நடத்தப் போகிற துப்பாக்கி சூட்டுக்கு அபராதத் தொகையை இலங்கை அரசு கொடுத்துவிட்டது, அதிலிருந்து தான் 5 லட்சம் பிரிட்ஜோ குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இது போன்று துப்பாக்கி சூடுகள் தொடரும்.” என்றார்

பகிர்

There are no comments yet