சென்னை: அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையால் திரையுலகைப் பயன்படுத்தி வருகிறார் விஷால் என தயாரிப்பாளர் தாணு குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதி நடக்க உள்ளது. இத்தேர்தலில் விஷால், டி.சிவா, கேயார், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் தலைமையில் 5 அணிகள் போட்டியிடுகின்றன. இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாணு, “தயாரிப்பாளர் சங்கத்தை இழிவுபடுத்தியுள்ளார் விஷால். நடிகர் சங்கத்துக்கு தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். “விஷால்” என்ற பெயரிலேயே “விஷம்” உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் குறித்த அவருடைய பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம். அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையால் திரையுலகைப் பயன்படுத்தி வருகிறார்” என்று காட்டமாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விஷால், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வரும் 17-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாணுவின் குற்றசாட்டு மற்றும் அவசர வழக்கு குறித்து நடிகர் விஷாலிடம் நமது கப்ஸா நிருபர் கேட்டபோது, மதிமுக தலைவர் இந்த அளவுக்கு பிரபலமாக காரணம் அவர் ஒவ்வொரு பிரச்சினையிலும் மூக்கை நுழைத்து, ஏதாவது வழக்குப்போட்டு தமிழகர்களுக்கு ஆதரவாக இருப்பதாக காட்டிக்கொள்வதுதான். அதுமட்டுமல்லாமல் சினிமாதான் அரசியல் வாழ்க்கைக்கு பாலபாடம் என்பதை தாணு மறந்துவிட்டார், அவரே என் ஆசான் வைகோவுடன் கொஞ்ச நாள் இருந்தார் என்பதையம் மறந்து விட்டார். . எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தானே. மக்களை துன்புறுத்தக் கூடிய தோல்வி படங்ககளை கொடுத்த நான், அதற்கு பிராயசித்தமாக விவசாயத்தை பாதிக்கக்கூடிய அனைத்து விஷயங்களிலும் களமிறங்கி வருகிறேன். சமீபத்தில் சிதம்பரம் பகுதியில் சீமைக்கருவேல மரத்தை அகற்றும் பணியில் வைகோவுடன் ஈடுபட்டேன். சகுனம் சரியில்லாததால் பாதியிலேயே விட்டுவிட்டேன். விவசாயத்தையும், விவசாயிகளையும் பேணிப் பாதுகாத்தால் மட்டுமே நாமும், அடுத்த தலைமுறையினரும் வாழ முடியும். எனக்கும் ஓட்டு கிடைக்கும். வரலட்சுமியுடன் லிவிங் டு கெதர் கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகவில்லை அந்த கோபத்தில் ஹைட்ரோ கார்பன் கெமிக்கல் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன். மக்களிடம் நல்லபேர் வாங்கி அரசியல் வாழ்க்கையில் அடி வைக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கிறேன்” என்றார்.

பகிர்

There are no comments yet