சென்னை: முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து தற்போது மீண்டும் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., தி.மு.க.வை தவிர மேலும் பல கட்சிகள் களம் இறங்க காத்திருக்கின்றன. அ.தி.மு.க. 2 ஆக பிளவு பட்டுள்ளது. சசிகலா தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் மோதி பார்க்க முடிவு செய்து விட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தனியாக போட்டியிடுகிறார்.

ஆர்கே.நகரில் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து நிர்வாகிகளின் பட்டியல், கட்சியின் சின்னம் குறித்து விரைவில் அறிவிப்பேன் என்றும் அவர் கூறினார். ஆர்கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜெயலலிதாவின் வாரிசாக பொதுமக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் நமது கப்ஸா நிருபரிடம் பேசியதாவது: ஓபிஎஸ்சை சந்தித்தது ஒரு பரபரப்புக்காகவே, அவருக்கும் எனக்கும் ஒத்து வராது. அத்தையின் மரணத்தை வைத்து அரசியல் செய்யும் மரண வியாபாரி அவர். அவரின் ஆதரவு எனக்கு இல்லாவிட்டால், எனது முதல் எதிரியே அவர் தான். என்னை எதிர்க்கும் எல்லாருக்குமே, என்னைப் போலவே டெபாசிட் போகும். என் முடிவு பிரகாசமாக உள்ளது. கட்சி நிர்வாகிகள் பட்டியல், கட்சியின் சின்னம் பற்றி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து தேர்தலுக்கு பிறகு அறிவிப்பேன், ஏனென்றால் அப்போது தான் கட்சியே இருக்காதே என்று கோபத்தில் விஷத்தை கக்கினார்.

There are no comments yet