கோவை: வெள்ளியங்கிரி மலையடிவார வனப்பகுதியில் பலநூறு ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக வளைத்து கடிட்டங்களை கட்டியுள்ளது ஈஷா யோகா மையம். இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு இத்தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஈஷா யோகா மையத்தின் பெரும்பாலான கட்டிடங்கள் யானைவழித்தடங்களே என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இவற்றை மீறி ஆதியோகி என்ற 112 அடி சிவன் சிலையை மோடியை அழைத்து 24 பிப் அன்று பிரதிஷ்டை செய்தார் ஜக்கி. இந்த விழாவில் 11 லட்சம் பேர் கலந்து கொண்டனர். புதுவை கவர்னர் கிரண்பேடி நடனமாடி பக்தர்களை குதூகலப்படுத்தினார். இந்த நிலையில் ஈஷா யோக மையத்தில் ஆண்கள் குளிப்பதற்கு சூரிய குண்டமும், பெண்கள் குளிக்க சந்திர குண்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஈஷாவின் சூரிய குண்டம் எனப்படும் ஆண்கள் தீர்த்த குளத்தில் குளித்த வேலூர் கல்லூரி மாணவர் ரமேஷ் நீரில் மூழ்கி பலியானார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் அளித்துள்ள விளக்கத்தில், வலிப்பு நோய், இருதய பிரச்சினை, வெட்டு காயங்கள் உள்ளிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த குளத்தில் குளிக்க வேண்டாம் என பார்வையில் படும்படி எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளது. இதனிடையே மாணவர் உயரிழந்த குளத்தின் மாதிரி நீரை போலீசார் ஆய்வுக்காக எடுத்துசென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தெளிவான ஆங்கிலத்தில் நமது கப்ஸா நிருபருக்கு ஜகஜால ஜக்கி அளித்த பேட்டியை தமிழில் தருகிறோம்: “பலத்த குற்றச்சாட்டுக்கும் எதிர்ப்புக்கும் இடையே, பல யானைகளை காவு வாங்கி, பிரதமர் மோடியை அழைத்து ‘ஆதியோகி’ என்ற பெயரில் என் திரு உருவச்சிலையின் பிரமாண்டத்தை இந்த உலகுக்கு அர்ப்பணித்தேன். அதன்மூலம் சில் பேரின் சொல்லடிக்கும் பல பேரின் கண்ணடிக்கும் ஆளாகி உள்ளேன். அதைக் கண்டு இந்த கார்ப்பரேட் கர்ம யோகி சிறிதும் அஞ்ச மாட்டேன். திருஷ்டி கழிக்க சரியான ஆளையும் சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்கு கன்னி கழியாத காலேஜ் பையன் கிடைத்ததும் என்னுடைய மேஜிக்கல் பவர் மூலம் சூரிய குண்டத்தில் வைத்து காவு வாங்கினேன்.

போலீசாரை முன்னதாகவே ‘கவனித்து’ அனுப்பி விட்டதால் அவர்கள் எப்.ஐ.ஆர் போடவில்லை, ஆய்வுக்காக கொண்டு சென்ற நீரையும் தீர்த்தமாக அருந்திவிட்டு மிச்ச்த்தை போலீஸ் நிலைய வளாகத்தில் தெளித்து என் பாவத்தில் பங்கு கொண்டனர். விரைவில் வழக்குகளில் இருந்து விடுபட்டு மேலும் எனது எல்லையை நீட்டிக்க வரும் காலங்களில் இன்னும் சில காவுகள் கொடுக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

பகிர்

There are no comments yet