சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது அண்ணன் மகள் தீபா திடீர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கி அதற்கான அறிவிப்பை தீபா வெளியிட்டார்.

பின்னர், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தாம் போட்டியிடுவது உறுதி என்று தீபா கூறினார். ஓபிஎஸ் அணியினர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் நானும் போட்டியிடுவேன் என்றார் அவர்.

உள்ளாட்சி தேர்தலிலும் “எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ சார்பில் போட்டியிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 10 நிமிடங்களுக்கு மேலாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தீபா திடீர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் அவரது கணவர் மாதவன், தோழியும் தியானத்தில் அமர்ந்துள்ளனர். தியானத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தை ஜெயலலிதா நினைவிடம் முன்பு வைத்து தியானம் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவர் அம்மாவின் ஆன்மா தீபாவின் தியானத்தில் தோன்றி, குடும்பத்தை பார் என்று அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அவர் கட்சியை கலைத்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்புவார் எனத் தெரிகிறது.

பகிர்

There are no comments yet