சென்னை: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. மாபெரும் வெற்றியைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மணிப்பூர் மற்றும் கோவாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால், அங்கு இழுபறி நிலவி வருகிறது. கோவாவில் இதர எம்எல்ஏ-க்களின் ஆதரவை பாஜக பெற்றுள்ளதாக கூறப்படுவதால், அங்கும் ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. இந்நிலையில், மணிப்பூரிலும் ஆட்சியமைக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. பஞ்சாபில் மட்டும் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. தொண்டர்களிடையே மோடி உரையாற்றியபோது நடந்து முடிந்த தேர்தலுக்கான முடிவுகள் புதிய இந்தியா உருவாகி வருவதை காட்டுகிறது .தேர்தல் முடிவுகள் மக்களிடம் அதிகமான விழிப்புணர்வை உருவாக்கியுள்ளது. இந்த வெற்றிக்காக அமித் ஷா மற்றும் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு தேர்தலிலும் வளர்ச்சி என்பது முக்கிய பிரச்சனையாக உள்ளது. நடுத்தர மக்களின் சுமைகள் குறைய வேண்டும், அதனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் உயரும். உத்தரப்பிரதேசத்தில் அதிக வாக்குகள் பதிவான சூழ்நிலையில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது சிறப்பான ஒன்று. பா.ஜ.க-வின் வெற்றி புதிய இந்தியாவை உருவாக்கும். அதிகாரத்தை கைப்பற்றுவது பதவிக்காக இல்லை, மக்களுக்கு சேவையாற்ற அது ஒரு வாய்ப்பு ஆகும்.

இதுகுறித்து ஒரு பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகி கூறும்போது: “நோட்டுட்த்தடை அறிவிப்பின்போது ரஜினி சொன்னதுபோல் ‘புதிய இந்தியா பிறந்தது’ பின்னர் சில்லரை தட்டுப்பாட்டால் மக்கள் அதிருப்தி அடைந்த போது பிறந்த குழந்தையாக இருந்த இந்தியா ‘இன்குபேட்டரில்’ சிறிது காலம் இருந்தது. தற்போது உ.பி. மற்றும் உத்தரகாண்ட் தேர்தல் வெற்றிக்குப் பிறகு மீண்டு வந்து மறுபிறவியை அடைந்துள்ளது மோடிஜிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆரம்பத்தில் வளைந்து கொடுத்த ரஜினி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கியது முதலே கருத்து எதுவும் தெரிவிக்காமல் கப்சிப் என்று வாய் மூடி மவுனியாக தனுஷின் சான்றிதழ் பிரச்சினை, ஐஸ்வர்யாவின் ஐநா அட்ராசிட்டி என பிசியாக உள்ளார். ஆனால் கமல்ஹாசனோ பாஷை புரியாவிட்டாலும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
ரஜினியை நம்பிப் பிரயோஜனம் இல்லாததால், கமலுடன் கை கோர்க்க பாஜக முடிவெடுத்து, தமிழகத்தில், ‘கொந்தளிப்பு’ தஞ்சாவூரில் ‘புளியந்தோப்பு’ – எடுபிடி ஆட்சியை கலைக்க சொல்லவில்லை, கலைத்தால் நல்லா தான் இருக்கும் என்கிற ரீதியில் பேட்டி கொடுக்க வைத்துள்ளோம். விரைவில் அனைத்து ரூபாய்களையும் தடை செய்து, தமிழகத்தில் ஆர்கே நகர் தேர்தலில் பண பட்டுவாடாவை முடக்கி, பாஜக ஆதரவு முதல்வரை முன்னிறுத்தி ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அமைதிப் பூங்காவான தமிழகத்தை, சத்தமில்லமல் சமாதிப் பாலைவனமாக மாற்றாமல் ஓயமாட்டோம் என்றார்.

பகிர்

There are no comments yet