சென்னை: மார்ச் 8ஆம் தேதி ஐநா சபையின் மகளிர் தின நிகழ்ச்சியில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா பரதநாட்டிய நடனம் ஆடினார். பெண்களின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலும் இந்திய கலாசாரத்தை உலகுக்குப் பறைசாற்றும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சி, இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஐநா சபையில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடிய முதல் பெண் என்கிற பெருமையை அவர் பெற்றார். தனது பரதநாட்டியக் குழுவினரோடு நடராஜர் புஷ்பாஞ்சலி, வைரமுத்து எழுதிய அவசர தாலாட்டுப் பாடல், உலக அமைதிக்காக மறைந்த இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடிய பாடல் ஆகியவற்றுக்கு நடனமாடினார். இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அனிதா ரத்னம், ஷோபனா உள்ளிட்ட நடனமணிகளுக்கு கிடைக்காத வாய்ப்பு திறமையற்ற ஐஸ்வர்யாவுக்கு கொடுக்கப்பட்டதை கண்டித்து பலரும் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் கிழி கிழி என்று கிழித்தனர்.

இந்நிலையில் பரத நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்காவில் நடைபெற்ற YouthCSW61 என்கிற பெண்கள் பாதுகாப்பு தொடர்புடைய கருத்தரங்கு ஒன்றில் ஐஸ்வர்யா தனுஷ் கலந்துகொண்டார். அதில் அவர் பேசும்போது, மற்றவர்களின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணிய வேண்டாம். பாதுகாப்பாக இல்லாததை இணையத்தில் பகிரவேண்டாம் என்று பெண்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் கப்ஸா நிருபரிடம் பேசிய ஐஸ்வர்யா: “பாடகி சுசித்ரா போன்ற பெண்கள் மட்டுமல்ல என் கணவர் தனுஷ் போன்ற ஆண்களும், பாதுகாப்பாக இல்லாத பிக்னிக் வீடியோயக்களையும் பீப் சாங் போன்ற பாத்ரூம் வீடியோக்களையும் இணைய தளத்தில் பகிர வேண்டாம். சினி பீல்டில் இதெல்லாம் சகஜம். சினி ஜோடிகள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தால் பிழைப்பு நடத்த முடியாது” என்று தைரியமான பெண் போல் கூறினார்.

ஆனால் விமான நிலையத்துக்கு மகளை வரவேற்க வந்த ரஜினி, ஐஸ்வர்யாவைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டு அழுதாராம். ஐஸ்வர்யாவும் ‘எனக்கு ஏன்பா இந்த ஐநா சான்சை வாங்கி கொடுத்தீங்க?’ என் அழுதாராம்.. ரஜினி அழுதது ஐஸ்வர்யாவின் நடனத்தை எண்ணி இல்லையாம், போலி சான்றிதழ், விக்கி லீக்ஸ் நடனத்தால் பெயர் ரிப்பேரான தனுஷிடம் தன் பெண்ணின் வாழ்க்கையை ஒப்படைத்து விட்டோமே என்றெண்ணித் தானாம். மேலும் ரஜினி விமான நிலையம் என்றும் பாராமல், ‘கெட்டவன்’ சிம்புவை நம்பலாம், நல்லவனை போல் நடித்த தனுஷை நம்பி ஏமாந்துட்டியேம்மா’ என்று கண்ணீர் சிந்தினாராம். அருகில் இருந்த கமல் ரசிகர் ஒருவர் கபாலி படத்தில் ரஜினி பேசிய வசனமான “இன்னும் என்ன கண்றாவியெல்லாம் பார்க்கணுமோ?” என்பதை உரக்க்ச் சொல்லி ரஜினியை கடுப்பேற்றினாராம்.

பகிர்

There are no comments yet