சென்னை: ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2.o படத்தின் தொலைக்காட்சி உரிமம் ரூபாய் 110 கோடிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2.0 படம், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில், உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, இந்த படத்திற்காக ஒலி அமைப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மேற்கொண்டு வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மட்டுமில்லாமல், ஆங்கிலம், சைனீஸ் மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் இப்படம் வெளியாகவிருப்பதாகத் புதிய தகவல் வெளியாகியுள்ளது. எந்திரன் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பையில் பிரமாண்டமான பொருட் செலவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த ஷங்கர் கப்ஸா நிருபரிடம் கூறியதாவது: “எனது ஆதர்ச நடிகர் கலைப்போலி ரஜினி நடிக்கும் எந்திரன் 2.0 வில் அவருக்கு வசதியாக வெளிநாடுகளில் இருந்து ரோபோக்களை வரவழைத்து, ரஜினி போல மேக்கப் போட்டு நடிக்க வைத்துள்ளேன். சின்னம்மா சிறையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து ஆட்சி நடத்துவதுபோல், நான் ரிமோட் கன்ட்ரோல் வைத்து ரோபோக்களை இயக்கி படத்தை முடித்து விட்டேன். சமீபத்தில் காட்சிகளை சுட ரெபரன்ஸ் தேடி யூடுயூப்பில் தேடிக் கொண்டிருந்த போது, ரஜினி மகள் ஐஸ்வர்யா ஐநா நடனத்தை பார்த்து மெய்சிலிர்த்தேன். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ரஜினியின் ஒப்புதலுடனும் ஐஸ்வர்யா ரஜினியின் ஐநா ‘குத்தாட்டாத்தை’ படத்தில் சேர்த்து வெளியிட உள்ளோம்,” ன்றார்.

பகிர்

There are no comments yet