சென்னை/டெல்லி: சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், மார்ச் 13 அவரது நண்பர் அறையிலிருந்து முத்துக்கிருஷ்ணன் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தெற்கு டெல்லி போலீஸ் துணை கமிஷனர் ஈஷ்வர் சிங், செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜேஎன்யு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் முத்துக்கிருஷ்ணன் தென் கொரியாவைச் சேர்ந்த அவரது நண்பர் கோமென் கிம்மின் அறையில் துரதிர்ஷ்டவசமாக தற்கொலை செய்து கொண்டார். முத்துக்கிருஷ்ணனன் இருந்த அறையின் கதவை கோமென் கிம் மற்றும் அவரது நண்பர் லக்‌ஷயஜித் ஐசக் உடைத்து உள்ளே சென்றபோது அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறார். அவர் இருந்த அறை முழுவதும் சோதனை நடத்தப்பட்டுவிட்டது. தற்கொலை குறிப்பு ஏதும் கிட்டவில்லை. தடயவியல் நிபுணர்களும் சோதனை மேற்கொள்ளவிருக்கின்றனர்” என்றார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘கபாலி’ திரைப்படம் முத்துகிருஷ்ணனை வெகுவாக பாதித்துள்ளது. அந்தப்படம் வந்த பிறகு தனது பெயரை ‘ரஜினி கிருஷ்’ என் பேஸ்புக்கில் மாற்றிப்போட்டு சர்ச்சைக்குரிய பதிவுகளை இட்டு வந்துள்ளார். அப்பதிவுகளில் சிறுவயது முதலே தான் அனுபவித்த தலித் வர்க்கத்தினருக்கு எதிரான சமூக சீர்கேடுகளை சாடியுள்ளார். ‘கபாலி’யில் ரஜினி தலித் வர்க்கத்தினருக்காக போராடி சிறைக்கு சென்று 25 ஆண்டுகள் கழித்து வந்து பழிவாங்குவது போல் ‘கலைப்போலி’ த்தனமான கதையமைப்பு கையாளப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்கொலை செய்து கொள்ள இருந்த அன்று காலை தனது நண்பருடன் கபாலி படத்தில் வசனங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பேசி நடித்துக் காட்டி அந்தப்படத்தில் அடிக்கடி ரஜினி சொல்லும் ‘மகிழ்ச்சி’ என்ற வார்த்தையுடன் நண்பருக்கு விடை கொடுத்து சென்றிருக்கிறார். கபாலி என்ற பெயர் கதாநாயகர்களுக்கு அருகில் கைகட்டி நிற்கும் அடியாட்களுக்கு வைக்கப்படும் பெயர், இன்று கபாலியே கதாநாயாகனாக உயர்ந்துவிட்டார் என்று தன் தமிழ் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.

நமது கப்ஸா நிருபர் அவசரப் பயணமாக அன்ரிசர்வ்டு டிக்கட்டில் டெல்லி சென்று செய்த புலனாய்வில், ரஜினி கிருஷ் (எ) ஜீவா முத்துக்கிருஷ்னன் சிறுவயது முதலே ரஜினி மீது அளவில்லாத வெறித்தனமான பற்று கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. பள்ளியில் படிக்கும்போது கிளாசை கட் அடித்துவிட்டு ரஜினி படம் பார்க்கஸ் சென்று விடுவாராம். கபாலி படம் பார்த்து ஆராய்ச்சி மாணவர் என்பதையும் மறந்து ஒரு படிக்காத முட்டாள் போல அப்படத்தில் வரும் வசனங்களையும், காட்சிகளையும் திரும்ப திரும்ப குணா கமல் போல் பிதற்றியுள்ளார். அவர்களது தமிழ் நண்பர்கள் சிலர் கூறும்போது, 40 ஆண்டுகளாக தமிழர்களை முட்டாளாக்கி தலையை கோதிவிட்டு ஆன்மீகம் என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்களை கொள்ளையடித்த கலைப்போலி கபாலி தலித் ரஜினியின் அரூபத்தை உண்மை சொரூபம் என்று நம்பி நவீன வரலாறு படிக்க வந்த அவன் இப்படி தற்கொலைப்பாடம் படித்து விட்டானே என் கதறி அழுதது பார்க்கப் பரிதாபமாக இருந்தது. மேலும் ரஜினி கிருஷ் தற்கொலையை தொடர்ந்து ஜேஎன்யூ நோட்டீஸ் போட்டில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த செய்திய நமது கப்ஸா நிருபர் தமிழில் கீழே தருகிறார். “ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் மரணத்தை தொடர்ந்து ஜெ என் யு பல்கலையில் ‘தற்கொலை’ குறித்த பட்ட மேற்படிப்பு அறிமுகம். தலித மாணவர்கள் வசதிக்காக ‘இந்த பட்டபடிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பிராமணரல்லாத மாணவர்களூக்கு மட்டும் இப்படிப்பில் சேர்க்கை வழங்கப்படுகிறது. அதிலும் தலித் என்றால் உடனடி அனுமதி! மோடியின் சமூகநீதி கண்ணோட்டத்தை கண்டு ஆண்டைகளூம் அளவில்லா ஆனந்தம்.” இவ்வாறு அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பகிர்

There are no comments yet