சென்னை: கோடை காலத்தின் கொடிய வெப்பத்தை பொதுமக்கள் சமாளிப்பதற்கு, அதிமுக சார்பில் ஆங்காங்கே நீர் மோர், தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படும் என டிடிவி தினகரன் கூரியுள்ளர். இந்த ஆண்டும் அதிமுக சார்பில் இப் பணியை அனைத்து பிரிவுகளும் செய்திட வேண்டும் என பொதுச்செயலாளர் சின்னம்மா சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு காணா வறட்சியோடு தொடங்குகிற இந்தக் கோடை காலத்தைப் பொதுமக்கள் எதிர்கொள்ள, அரசு அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருகிறது. அதே வேளையில், புவி வெப்பமயமாதல் மற்றும் இயற்கையின் சுழற்சியில் ஏற்பட்டிருக்கும் தட்ப வெப்ப மாறுபாடுகளால் வருடத்துக்கு வருடம் அதிகரித்து வரும் கோடை காலத்தின் கொடிய வெப்பத்தைப் பொதுமக்கள் இலகுவாகச் சமாளிப்பதற்கு, அ.தி.மு.க சார்பில் ஆங்காங்கே நீர் மோர், தண்ணீர்ப் பந்தல்களைத் திறக்க வேண்டும் என ஆண்டுதோறும் ஜெயலலிதா, கட்சியினருக்கு அன்புக் கட்டளை இடுவதும், அதனைக் கட்சியின் செயல்வீரர்கள் கருத்தோடு செய்து சிறப்பதும், ஆண்டுதோறும் நடக்கிற ஓர் வாஞ்சையுள்ள நிகழ்வு என்பதை இவ்வேளையில் நான் பெருமையோடு நினைவுகூர்கிறேன்.

படிப்பூட்டும் பள்ளியிலும், பக்தியூட்டும் ஆலயங்களிலும்கூட அன்னமிட்டே வளர்ந்த அ.தி.மு.க-வின் தொண்டுள்ளத்தால், இவ்வாண்டு கோடைகாலத்திலும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நீர் மோர், தண்ணீர்ப்பந்தல்களை ஆங்காங்கே அமைத்து, தாளாத வெப்பத் தவிப்பிலிருந்து தமிழக மக்களுக்கு இளைப்பாறுதல் தருகின்ற புனிதத் தொண்டுதனைக் கட்சியின் அனைத்து பிரிவுகளும் களமிறங்கிக் கனிவோடுசெய்திட வேண்டுமாய்க் கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நமது கப்ஸா நிருபரின் ஆர்.கே.நகர் ரகசிய ரவுண்டப்பில் வேறு ஒரு உண்மை வெளிப்பட்டுள்ளது. அதாகப்பட்டது, அதிமுக சார்பில் கண்டைனர் மூலமாக பணத்தை தண்ணீராக இறைத்து, ஆங்காங்கே நீர் மோர் பந்தல் வைத்தல் மூலம் இடைத்தேர்தலில் வெற்றி பெற திட்டம் தீட்டுகிறதாம் சின்னபுத்தி சின்னம்மா தரப்பு. அதன்படி ஒவ்வொரு தண்ணீர் பந்தலிலும் 3 பானைகள் வைக்கப்படும், முதல் பானையில் மினரல் வாட்டர், இரண்டாவது பானையில் டாஸ்மாக் சரக்கும் மூன்றாவது பானையில் புதிய ரூபாய் நோட்டுகளும் இருக்குமாம். இதன் மூலம் தங்கு தடையின்றி தண்ணீர் பந்தல் என்ற போர்வையில் தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணைத்தூவ திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சின்னம்மாவின் மன்னார்குடி மாபியா பணப் பட்டுவாடா செய்து ஆர் கே நகரில் வெற்றிக்கனியை பறிக்க தொண்டர்கள் உதவி புரிய வேண்டும் என கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆர்கே நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பகிர்

There are no comments yet