புது டெல்லி: ‛பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து விரைவில் கட்சித் தலைமை முடிவு செய்யும்’ என பன்னீர்செல்வம் தெரிவித்தார். தலைமை தேர்தல் கமிஷனருடனான சந்திப்புக்கு பின், பன்னீர்செல்வம் கூறியதாவது: சசிகலா இடைக்கால பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டார்; தேர்ந்தெடுக்கப்படவில்லை. கட்சியின் சட்டவிதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. அதன்படி, கட்சியின் பொது செயலருக்கு உள்ள அதிகாரங்களை சசிகலா பயன் படுத்த முடியாது. புதிய நிர்வாகிகளை சேர்க்கவோ, ஏற்கனவே உள்ளவர்களை நீக்கவோ, அவருக்கு அதிகாரம் கிடையாது.

அதேபோல் பொதுச் செயலர் பதவி காலியாக இருந்தால், புதியவரை தேர்ந்தெடுக்கும் வரை, கட்சியின் அடுத்த மூத்த தலைவரே, கட்சியை வழிநடத்த வேண்டும். அதன்படி, அவைத் தலைவர் தான் கட்சியை வழிநடத்த வேண்டும். இதையே தலைமை தேர்தல் கமிஷனரிடம் வலியுறுத்தினோம். அதன்படி, ஆர்.கே.நகர் சட்டசபை இடை தேர்த லில், கட்சி வேட்பாளரை அறிவிக்கவும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் எங்கள் தரப்புக்கே அதிகாரம் உள்ளது என்பதை திட்ட வட்டமாக, தகுந்த ஆதாரங்களுடன் கூறி யுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, ”எங்கள் கட்சித் தலைமை அதை முடிவு செய்யும். விரைவில் நல்ல செய்தி வரும்,” என, பன்னீர்செல்வம் பதில் அளித்தார்.

இது குறித்து நமது கப்ஸா நிருபரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ கூறியதாவது: நாங்களும், மோடி ஏதாச்சும் செய்வாருன்னு காத்துக்கிட்டுதான் இருக்கோம், ஒன்னும் நடக்க வில்லை. உ.பி. தேர்தல்ல மோடி பிசின்னு சொல்லி விட்டார்கள். இப்ப ஆர்கே நகர்ல தாமரைல நின்னா மாறப்போறது ஒன்னும் இல்லை என்று விரக்தியாக சொன்னார்.

சசிகலா ஆதரவாளர் ஒருவர் கூறும்போது: ஓபிஎஸ் இதோட அரசியல் அவுட் ஆய்டுவார். வீரப்பன் கதை தான், கொள்ளை அடித்து வைத்துள்ள பல ஆயிரம் கோடிகள் இருக்கும்வரை ஆட்டம் இருக்கும் அப்புறம் கோவிந்தா தான். தியானம் நாடகம் கூடிய விரைவில் குட்டு வெளிப்படும் இங்கு தாமரை மலராது இலை உதிர்ந்தால் சூரியனின் வெப்பம் தான் வரும் இன்னும் சிலநாட்களில் நடக்கும் நிகழ்வுகள் இந்த சுயநல கருப்பு ஆடுகள் அடையாளம் காட்டப்பட்டும் எட்டப்பர்கள் முகத்தில் முக்காடு போட்டுகொண்டு தெரு தெருவாக அலையப்போவது நிச்சயம் என்றார்.

சரி என்று கப்ஸா நிருபர் பஸ் பிடித்து தீபா வீட்டுக்கு சென்றபோது, வெறிச்சோடி இருந்தது. அங்கிருந்த ஒரே ஒரு தொண்டர் கூறும்போது, என்ன நீங்க இவ்வளவு சீக்கிரம் மதியம் 3 மணிக்கே வந்துடீங்க… தீபா அம்மா இப்பதான் எந்திரிச்சு பெட் காஃபி குடிக்கிறாங்க. ஆறு மணிக்கு மேல வாங்க என்று நமது நிருபரை துரத்தி விட்டார்.

There are no comments yet